4. செம்பாலை முதலிய ஏழு பாலையும் அவை பிறக்கும் விபரமும். | ம | ப | த | நி | ச | ரி | க | ம | ப | த | நி | ச | ரி | க | நம்பர் | குரல் | துத்தம் | கைக்கிளை | உழை | இளி | விளரி | தாரம் | குரல் | துத்தம் | கைக்கிளை | உழை | இளி | விளரி | தாரம் | | ச | ரி | க | ம | ப | த | நி | ச | ரி | க | ம | ப | த | நி | 1 | ச | ரி | க | ம | ப | த | நி | ச | | | | | | | 2 | | ச | ரி | க | ம | ப | த | நி | ச | | | | | | 3 | | | ச | ரி | க | ம | ப | த | நி | ச | | | | | 4 | | | | ச | ரி | க | ம | ப | த | நி | ச | | | | 5 | | | | | ச | ரி | க | ம | ப | த | நி | ச | | | 6 | | | | | | ச | ரி | க | ம | ப | த | நி | ச | | 7 | | | | | | | ச | ரி | க | ம | ப | த | நி | ச |
1 | ச | ச | குரலே குரலாயது .... .... ..... செம்பாலை. | 2 | ரி | ச | துத்தமே குரலாயது .... .... ..... படுமலைப்பாலை. | 3 | க | ச | கைக்கிளை குரலாயது .... .... ..... செவ்வழிப்பாலை. | 4 | ம | ச | உழை குரலாயது .... .... ..... அரும்பாலை. | 5 | ப | ச | இளி குரலாயது .... .... ..... கோடிப்பாலை. | 6 | த | ச | விளரி குரலாயது .... .... ..... விளரிப்பாலை. | 7 | நி | ச | தாரம் குரலாயது .... .... ..... மேற்செம்பாலை. |
இச்சக்கரத்தில் உழையே குரலான (ச-ப முறையாய்) ம, ப, த, நி, ச, ரி, க ச, ரி, க, ம, ப, த, நி என்ற வரிசையில் ஏழு பாலைகளும் பிறப்பதை மேலும் கீழுமாகக் காட்டியிருக்கிறோம். வட்டப்பாலை சொல்லுங் காலத்தில் இச்சுரங்கள் ச-ப முறையாய்ப் பொருந்தும் முறை தெரிந்து கொள்ளலாம். உழையில் தோன்றும் குரலும் தாரத்துழை தோன்ற அவ்வுழை குரலானதும் ச-ப முறையுடையதென்று நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். தாரத்தில் உழை தோன்ற அவ்வுழையே குரலாகியது கோடிப்பாலை என்கிறார். மேற்காட்டிய அட்டவணையில் குரலே (ச) குரலாகிய செம்பாலை முதல் 7 பாலைகளும் குரல் முதல் வலந்திரிந்து ஒவ்வொரு மூர்ச்சனையாகிறது. இவைகள் ஒவ்வொன்றும் எந்தச் சுரத்திலிருந்து ஆரம்பிக்கிறதோ அந்தச் சுரத்திற்கேற்ற தனிப்பெயரைப் பெறுகின்றன.
|