பக்கம் எண் :

540
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ் சுருதிகள். முகவுரை.

வில்தோன்றும்....செம்பாலையென்றும்.
ரியில்"....படுமலைப்பாலை   "
வில்"....செவ்வழிப்பாலை   "
வில்"....அரும்பாலை   "
வில்"....கோடிப்பாலை   "
வில்"....விளரிப்பாலை   "
நியில்"....மேற்செம்பாலை   "

பெயர் பெறுகிறது. இப்பெயர்கள் பின்வரும் இரண்டாம் சக்கரத்தில் மாறி வருகிறதாகக் காண்போம். அவைகள் ச-ப முதல் இரட்டித்த சுரங்களில் வருவதினால், முந்தினதற்கும் பிந்தினதற்கும் பேதம் காட்டுவதற்கென்று சொல்லப்பட்டன. மேலும், இதன் பின்வரும் பாலை அட்டவணைகளில், ச-ம முறைப்படி இடமுறை திரிந்த பாலைக்கு ஒரு பெயரும், ச-ப முறைப்படி வலமுறை திரிந்த பாலைக்கு வேறொரு பெயருமாகப் பெயரிட்டு அழைப்பதைக் காண்போம். இப்பெயர்கள், நால்வகை யாழ்களினுள்ளும் ச-ப, ம-ச, ப-ச, நி-ம என்ற சுர அடுக்குகளில் ஆரம்பிக்கும் பொழுது உண்டாகும் பேதமேயொழிய வேறில்லை. இவைகளைப் பின்வரும் சில அட்டவணைகளினால் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

82-83.

"இறுதி யாதி யாக வாங்கவை
பெறுமுறை வந்த பெற்றியி னீங்காது"

என்பது, தார முதலாகப் பெறுமுறையாய் வந்தபடியே நீங்காமலென்றவாறு.

84-85

"படுமலை செவ்வழி யரும்பா லையெனக்
குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின்"

என்பது, கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலையும், துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலையும், குரல் குரலாக அரும்பாலையும் தற்கிழமை திரிந்தபினென்க.

அரும்பாலைக்கு நரம்பு இரட்டித்த பெற்றித்தென்க.

86-89

"முன்னதன் வகையே முறைமையிற் றிரிந்தாங்
கிளிமுத லாகிய வெதிர்படு கிழமையுங்
கோடி விளரி மேற்செம் பாலையென
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்

என்பது, முன்பிற்படியே தாரம் குரலாகக் கோடிப் பாலையும், விளரி குரலாக விளரிப்பாலையும், இளி குரலாக மேற் செம்பாலையுமாய், மேற்செம்பாலை, இளி நரம்பிரட்டித்த நிலைமையினையுடைத்தாய், இப்படிச் சமைந்த பதினாற்கோவைப் பாலை நிலையிலென்றவாறு.

90

"இணைநரம் புடையன வணைவுறக் கொண்டாங்கு"