6. மந்தரம், மத்தியம், தாரம் என்னும் ஸ்தாயிகள். சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை பக்கம் 93. 76 "ஏனை மகளிருங் கிளைவழிச் சேர" என்பது, இதனைப் பெண்டிர்க்குரிய தானமாகிய பதினாற் கோவையிலே பொருந்தக்கூட்ட வேண்டுமென்றவாறு. கூட்டும்படி : 80-81 "மேல துழையிளி கீழது கைக்கிளை வம்புறு மரபிற் செம்பாலை யாயது" என்பது, உழை முதற் கைக்கிளை இறுதியாக மெலிவு நான்கும், சமம் ஏழும், வலிவு மூன்றுமாய் உழை முதலாக செம்பாலையாய தென்க. உழை முதல் கைக்கிளை இறுதியாக மெலிவு நான்கு, சமம் ஏழு, வலிவு மூன்று என்று சொல்வதை நாம் கவனிக்கையில், உழையே குரலான பொழுது தாரத்துட்டோன்றும் உழை வரை அதாவது ச, ரி, க, ம என்ற நாலு சுரங்களும் மந்தரஸ்தாயியாகவும் அதாவது மெலிந்த குரலாகவும், தாரத்துள் தோன்றும் உழை முதல் கைக்கிளை இறுதியாயுள்ள ஏழு சுரங்களும் மத்திய ஸ்தாயி அதாவது சமம் ஆகவும், தாரத்துள் தோன்றும் உழைக்கு மேல் கைக்கிளையில் தோன்றும் தாரம் வரை ப, த, நி என்ற மூன்று சுரங்களும் தாரஸ்தாயியாகவும் அதாவது வலிவாகவும் சொல்லுகிறார். "வலிவ மெலிவுஞ் சமனு மெல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன்" என்பது, இப்படியால், வலிவும் மெலிவும் சமனுமெனப்படாநின்ற தான நிலையினையுடைய இசைக்கூறு பாடுகளுக்கெல்லாம் நரப்படைவு கெடாமலும், பண்ணீர்மை முதலாயின குன்றாமலும் புணர்க்கவல்லனாய், அப்புணர்ப்பிற்கமைந்த எழுத்துக்களால் இசை செய்யவல்ல யாழாசிரியனுமென்றவாறு. நிறுத்தல் வேண்டிப் பொலியக்கோத்த புலமையோனென்க. மெலிவு மந்தரம் | சமம் மத்தியம் | வலிவு தாரம் | நி, ச, ரி, க ம, ப, த, நி | ம, ப, த, நி, ச, ரி, க ச, ரி, க, ம, ப, த, நி | ம, ப, த ச, ரி, க |
மேலே காட்டிய வரிசையில் முதல் வரிசையைப் பற்றிய விவரஞ் சொன்னோம். அதாவது, நி, ச, ரி, க நாலும் கீழ் ஸ்தாயி என்றும், ம, ப, த, நி, ச, ரி, க என்ற ஏழு சுரங்களும் மத்திய ஸ்தாயி என்றும், அதற்கு மேல் ம, ப, த என்ற மூன்று சுரங்களும் மெல் ஸ்தாயி என்றும் காண்கிறோம். இரண்டாவது வரியில் ம, ப, த, நி என்ற நாலும் மந்தர ஸ்தாயியாகவும், ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழும் மத்திய ஸ்தாயியாகவும், ச, ரி, க என்ற மூன்றும் தாரஸ்தாயியாகவும் நமது வழக்கத்திலிருக்கிறது. இதையே மெலிவு, சமம், வலிவு என்று சொல்லுகிறார்.
|