திருநெல்வேலி, மகா வித்வான் மகாஸ்ரீ கவிராஜ நெல்லையப்பபிள்ளை அவர்கள் இயற்றியது. சாற்றுகவி. சீராருந் தஞ்சைநக ராபிரகாம் பண்டிதனற் செல்வன் சங்கத் தாராறு திகழ்சடைய னொடுதேர்ந்த விசைநூலைத் தகையி னாய்ந்தே யீராறோ டீரைந்தாஞ் சுருதியென விசைப்பவர்சொல் லீர்ந்து போக்கி நேராருஞ் சுருதியெண்மூன் றெனத்தமிழ்நூன் முறைவிளக்கி நிலைக்க நாட்டி | (1) | பண்ணியல்புந் தண்டமிழின் மறையிலவை யண்ணியல்பும் பலவு மற்றார் எண்ணரிய நுண்மைகளு மினிதமுத மெனவியைந்து சாலும் விண்ணவரும் புகழ்கருணா மிருதசா கரநூலை விளம்பி யிந்த மண்ணுலகில் நண்ணுமுயர் புலவர்தினம் போற்றுநலம் வாய்ந்தான் மன்னோ. | (2) |
அம்பாசமுத்திரம், தீர்த்தபதி ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதர், மகாஸ்ரீ அரிகரபாரதியார் அவர்கள் இயற்றியது. தரவு கொச்சகக் கலிப்பா. | 1. | கார்பரவு கனம்பரவக் கருங்கோட்டி லிழிதருவெண் ணீர்பரவு நிலம்பரவு நீள்பொருநை நதியோடுஞ் சீர்ாபரவுந் தமிழொடுமத் திறம்பரவுஞ் சித்தசனார் தேர்பரவு மேர்பரவு தென்பாண்டி நன்னாட்டில். | | 2. | தாற்றோடை வனமருந்து தடப்புழக்கைப் புழுதியளாய்த் தூற்றோடைக் களிறுகுலாந் தொடர்மலையக் கீழ்சாரல் மேற்றோடைச் சுளைபிளப்ப வியன்பலவி னிழிதேறல் ஆற்றோடை நிறைபெறுசாம் பவனோடை யாம்பதியில். | | 3. | ஈன்றோரிற் புவிபுரந்த எழில்வேம்பன் பழங்கிளையாய் ஏன்றோரீ ழத்தரசின் முடிபறிப்ப இதனிமித்தம் வான்றோயுஞ் சோலைநகர் நாடாண்ட வம்சமெனச் சான்றோர்கள் பலவிளக்குஞ் சான்றார்தம் பெருமரபில். வேறு. | | 4. | புவிசேரப் புகழந்தச் சான்றார்த மான்றகுலம் பொருவில் சீர்த்தி செவிசேரப் பெருங்கேள்வி பாலசுப்பி ரமணியப்பேர்ச் செல்வ னுண்மைச்சவிசேரு மரியாள்தன் தனயனிரு தாண்மலர்க்கே தாச னாகிச் சுவிசேட முத்தெனும்பே ரெய்தினன்றன் பேரனெனச் செப்புவோனும். |
|