பக்கம் எண் :

70

5. 

சொற்றசுவி சேடமுத்து பலநாளு மனுட்டித்த தூய்த வத்தாற்
பெற்றசுகு மாரன்முத்து சாமியென்பா னில்லறத்தின் பெருமை
யெய்தக்கற்றகற்பி னாலுயர்ந்த அனநடையன் னம்மாளைக் கடிம ணத்தில்
உற்றனனீண் டவர்க்குதித்த மக்களெண்மர் தமின்முதலா யுதித்தோ னென்றும்.
 

6.

கலைகூர்ந்த லார்டுபெண்டு லண்டார்தர் லாலியெனுங் கவர்னர் கட்குந்
தலைகூர்ந்த ஆர்பிடட்டு பெட்போர்ட்டாங் கலைக்டருக்குஞ் சகாய
மானநிலைகூர்ந்த நிதித்தலைமை எய்தியசா மிக்கண்ணு நிபுண ருக்கும்
அலைகூர்ந்த தலம்புகழும் ஆனரபிள் சிவசாமி ஐய ருக்கும்.
 

7.

சண்முகமெய் ஞானசிவா சாரியராஞ் சுவாமிகட்கும் சார்ந்தார்க்
கெல்லாந்தண்முகமே தருமொருதி வான்மாத வராவவர்க்கும் தன்னே ருற்றார்
உண்முகநீ ரறியூகி கமிஷனராம் பராங்குசநா யுடுகா ருக்கும்
மண்முகமே லுண்மையினின் றெண்மையுநீங் காதுநெறி வச்செல்
வோர்க்கும்.
 

8. 

இன்னிசைநூன் முறைதெரிந்து மன்னிசையை எவர்செவிக்கு
மினிது பெய்துதன்னிசையை வளர்த்திடுமுத் தையனெனும் பாகவதர் தலைவ னுக்கும்
மின்னிசைமாற் றாயிரஞ்சே ரபரஞ்சி யொழுக்கமென மிடற்றின்
செவ்வித்தென்னிசையை யிசைக்குமகா லிங்கனெனப் பெயர்பூண்ட சீரா
ளர்க்கும்.
 

9.

ஒருதைவஞ் சிவமதென ஒருமொழியுந் தமிழதென வுலகு றுத்தி
விருதைநிலை நாட்டியசீர் விருதைசிவ ஞானியர்க்கும் வித்த கத்தோர்
இருதயமாந் தமிழாய்ந்து வசனாதி நாற்கவியி னினிய நூல்கள்
பொருதலறப் பலவிசைத்த அரிகரபா ரதியென்னப் புகலு மெற்கும்.
 

10. 

பருத்தபரும் பாதகத்தின் உயிர்நீத்துப் பிறகெழுந்த பரம னார்க்கே
கருத்துதவு படிவருக்குங் காயகற்ப நிலையிருந்த கனயோ கற்கு
மருத்துவர்க்குஞ், சோதிடர்க்கும் இயலிசைநா டகத்தவர்க்கும் வறுமை
யோர்பொன்பெருத்தவர்க்கு முளங்கனிந்து நேசிக்கு நேசனெனப் பேசு வோனும்.
 

11. 

சகமேய தண்மையினா லுண்மையினால் வண்மையினால் தனத்தா
லின்பம்அகமேவ வசனிக்கு மாற்றலொடு கல்விமதி அதிநுட் பத்தால்
இகமேவு நாட்டாராம் நாடார்தம் ஒங்கிசமா மிரணி யச்சீர்
மகமேருக் கோட்டில்வைத்த மங்காத சுடர்விளக்கி்ன் வயங்கு வோனும்.
 

12. 

செந்தமிழுந் தெள்ளிசையுந் தேவர்பிரான் காதைகளுஞ் செவியே
கேட்பகந்தமுறு போனகமுங் கனகமுடன் புலவருக்குக் கையே நல்க
வந்தவர்தம் மொழிகேட்டு வேண்டுவன வுசிதம்போல் வாய்வ ழங்க
அந்தரங்க முழுதொருவர்க் காலயமே யாகநித மாக்கி னோனும்.
 

13. 

இருளியலு மிகவாழ்க்கை யெனவெறுத்தே வைகைநதி யெழுந்து
லாவும்சுருளியிலே சென்றுகரு ணாநிதியாம் முனிவரனைச் சூழ்ந்து போற்ற
அருளியலு மவனளித்த வரன்முறையே மருத்துவங்க ளனைத்துந்
தேர்ந்துதெருளியலும் வைத்தியத்தால் மன்னுயிரின் நோய்பலவுந் தீர்க்கிற்
போனும்
 

14. 

பொல்லாத வினைபுரிந்திங் குயிர்வாழ்தல் பாவமெலாம் பொருந்து
மென்றேநல்லான வுவாத்திமையாந் தொழிலதனை மனைவியுட னனிமேற்
கொண்டுபல்லான நகருறைந்து சோழர்கடந் தலைநகராப் பகரா நின்ற
அல்லான சோலைபுடை சூழ்தஞ்சை மானகரை அடுத்தோ னென்றும்.