பக்கம் எண் :

71

15.

 அடுத்திட்ட தஞ்சையிலே எடுத்திட்ட முன்வினையின் ஆற்றாற்
செந்நெல்மடுத்திட்ட பூம்பழனப் பரப்பினொடுங் கனிகளெல்லாம் மல்கித்
தூங்கத்தொடுத்திட்ட சோலைகளு மிருநிதியு மணிமாடத் தொடர்புஞ் சூழல்
உடுத்திட்ட தோற்றமுடன் அப்பதிக்கோ ரேற்றமுடன் உயர்ந்தோனென்றும்.

16.

உரைதருவோன் அபிதானம் ஆபிரகாம் பண்டிதனென் றுலகங் கூறும்
தரைதருமோர் தருமமெனு மவனப்பாற் றரணியெலாந் தனிக்கோ
லோச்சுவரைதருதோள் ஆங்கிலசக் ராதிபதி யருணோக்க மரிதி னோக்கித்
திரைதருமா னிலத்தளித்த ராவுசா யபுப்பட்டஞ் சிறப்பப் பெற்றோன்.
 

17.

மாண்மிக்க அணிகலனாம் பட்டப்பேர் தனைவனையவ் வள்ளல்
பெற்றஆண்மக்க ணால்வருக்கும் பெண்மக்க ளறுவருக்கும் மருமை யான
பூண்மிக்க வணிதரல்போ லாங்கிலமும் பைந்தமிழும் பொலியச் செய்து
பாண்மிக்க வூட்டிடப்பெண் மக்களுக்கோ ரிசைவலனைப் பார்த்த மைத்தான்.
 

18. 

பார்த்தமைத்த காயகரு மகார்க்கருத்து சரளிமுதற் பலவி யீறா
ஆர்த்தமுறை தனைக்கடந்தங் கிசைத்தலையு மிசையறியா ரநேகர் கூடி
நீர்த்தவிசை நூற்பிறப்பு வட்மொழிக்க ணல்லாது நிலத்தோர் பாங்கர்
போர்த்ததமி ழிடமிலெனப் புகல்தலையுங் கேட்டுளத்திற் புண்பாடுற்றே.
 

19. 

பச்சங்கத் தரியறியாப் பரனடத்தி னிடைமுளைத்துப் பரந்த காலம்
முச்சங்கத் திடைக் கிடந்து தேசமெலாந் தவழ்ந்தேறி முழங்கி
மேன்மேல்உச்சங்கொ ளிசையினிய முத்தமிழி னொருதமிழா யுலாவக் கண்டும்
அச்சங்கொ ளாதிங்ங னவரிசைத்தல் வியப்பெனத்த னகத்தி லுன்னி.
 

20.

 பாண்பிறந்த நெறியிதென அதுவளர்ந்த விடமிதெனப் பரிபா லித்த
மாண்பினரு மிவரென்ன மற்றதனைக் கையாண்டார் வகுப்பீ தென்னச்
சேண்பிறங்கு நவநவமா யிராகங்கள் கீதாதி செய்தற் கான
வேண்பிறங்கில் வழியிதெனச் சுருதிகளித் துணையென்ன விரிப்பவேண்டி.
 

21.

 பதினான்கி யாண்டளவாய் மநுமுதலோர் வகுத்தளித்த பண்டை நூலும்
விதிநூலெண் பரதவயித் தியநூலுஞ் சித்தர்பலர் விரித்த நூலுந்
துதிமேவு மிதிகாச புராணமுதன் மதநூலின் றொகையும் வேண்டும்
நிதிமேவு மேனாட்டார் நூல்பலவு மாய்ந்ததன்றி நிரம்பக் கெட்டு.
 

22.

சாரங்கர் உயர்பாரி ஜாதரொடு பரதரிவர் தந்த நூலின்
சாரங்கள் பழையதமிழ்க் காவியமோ டகம்புறமாச் சாற்று நூலின்
சாரங்கள் தமிழ்மறையி னமிழ்தினெழு தருமினிய சங்கீ தத்தின்
சாரங்கள் சத்தியவே தத்திசையின் விரிகின்ற சாராம் சங்கள்.
 

23.

இன்னவிசை நுணுக்கமெலாஞ் செந்நெறியிற் றெரத்தெளிந்து
சிந்தை யெல்லாம்தென்னிசையின் மயமாக வனுபவித்தவ் வனுபவத்தின் சீர்மை
யெல்லாம்எந்நிலமுந் தெளிந்துய்வான் உண்மைநிலை கடைப்பிடித்தே இயம்ப
லானான்முன்னநவின் றிட்டமுறை வினாக்களுக்கிங் கேற்றவிடை மொழியக்கேண்மின்.
 

24.

முதனடிப்பக் கோசிகத்தி னிடையெழுந்த திசையென்று முன்னை மூன்று
விதமருவு தமிழ்க்கழக மதுவளர்ப்ப வளர்ந்ததென்றும் விரும்பி நாளும்
பதனமுறக் காத்தவர்கள் திரவிடமூ வேந்தரென்றும் பராவு மன்னோர்க்
கிதனமர்ந்த தமிழர்களே கையாண்டார் அந்நாள்தொட் டின்றுமென்றும்.