பக்கம் எண் :

72

25 

சரிமுதலா மெழுசுரங்கள் நிலைமாற இராகங்கள் சனிக்கு மந்த
வரிமுறையிற் சிலவிசையே ஈண்டுவழக் கத்துளது மற்று மாற்றல்
தெரிமுறையி லிராகங்கள் பல்லாயி ரத்தொகையிற் செறிவ வென்றும்
உரியவந்த முறைநவமே யாயிடினுப் பழமைமுறைக் குற்ற தென்றும்
 

26 

அவ்வழியே கீதங்கள் கீர்த்தனைகள் இராகங்கள் ஆளத் திக்காஞ்
செவ்வழிகட் குதாரணமாய்ப் பலவியற்றித் தமிழிசையின் சிறப்பீ
தென்னஎவ்வழியுந தலைதுளக்க வேற்றநெறி தனைப்புகன்று
மிசைந்கோர்தாயின்ஒவ்வரிய சுருதிகளை ஒருவாறு கணித்தறிவா னுளத்தி
                                                    லுன்னி
 

27

எழுமூன்றோ டொன்றென்றும் ஒன்றென்றும் பலவென்று மொழுங்கே
தின்றிவழுமூண்ட மயக்கத்தால் வகுத்தவட நூல்களினை வகையின் மாற்றித்
தொழுமூவில் தமிழ்மறையால் பரம்பரையால் அனுபவத்தால் சுருதி
தன்னால்எழுமூது சுருதிஇரு பதினான்கே யாமெனவு மியம்புங் காலை.
 

28 

கடுத்தசிலர் வடமொழியிற் புகன்றதுவே சாலுமெகக் கழறி வாதந்
தொடுத்திடலு மங்கவரைச் சுருதியுத்தி யனுபவத்தின் றுறைக ளாலே
மடுத்தபிடி விடப்புரிந்தான் மற்றெனக்கு மிம்முறையின் மயக்கமெய்தல்
அடுத்தறிந்தங் கதைநீப்ப ஆப்பிரகாம் பண்டிதனா மரிய சீலன்.
 

29

தானீன்ற தனயைமர கதவல்லி கனகவல்லி தம்பாற் கூற
மீனீன்ற விழிச்சியரச் சங்கீத விற்பனிகள் வீணை தன்னால்
தேனீன்ற மிடற்றிசையால் சுருதிஇரு பதினான்காய்த் தெளியச் செய்தார்
ஆனீன்ற கன்றெனவே அறியாது துள்ளுகிற்பார்க் கறைவ தென்னே.
 

30

முன்பந்த முறைநிகழ்ந்த விசைநுணுக்க முதலியன முடிந்து போகப்
பின்பந்த விசைநுணுக்கம் புந்திவழி எவ்வழியோ பெரிது தோன்ற
அன்பந்த முறாக்களிப்பி னம்புவியோர் அனுபவிக்கு மாறு செய்தான்
இன்பந்த முளம்பெருக்கு மித்தலஞ்செய் கைம்மாறிங் கென்னேயென்னே.
 

31 

இந்நூற்கிங் கேற்றகரு ணாமிருத சாகரப்பே ரியைய வைத்தே
எந்நூற்குந் தலைபரோடா மன்னமைச்சர் மாதவராவ் இறைமை மேய
தொன் னூற்க ணனிபயின்றார் நிறையவைக்க ணரங்கேற்றல் செய்தான்
கானப்பன்னூற்கு மிந்நூன்மேம் பட்டதெனத் துதிமொழிகள் பாரித் தாரால்.
 

32 

மலைவிளங்கு மணிமாடத் தஞ்சையிலும் தமிழிசையில் வடாத தான
கலைவிளங்கு புலவர்பலர் சிரந்துளக்க அரங்கேற்றல் கவினச் செய்தே
அலைவிளங்கு கடல்புடைசூழ் அவனியெலாம் புகழ்நிலவா லலங்க
ரித்தான்தலைவிளங்க வுதித்தவரி லிவன்றுணையா ரிருமைநயந்
                                             தனைப்பெற்றோரே.
 

33 

இலக்கணமே இலக்கியமே காவியமே புராணாதி இதிகா சம்மே
தலக்கணுயர் தமிழ்நாட்டுச் சரித்திரமே வைத்தியமே சமாதி யோகந்
துலக்குமொரு நூலாகி யாகமமே சோதிடமே சுருதி கீதவலக்கணதே யென்பகரு ணாமிருத சாகரமா வழங்கிந்நூலே.