நூலிலாவது அப்பரதர் நூலை அனுசரித்து 13வது நூற்றாண்டில் சாரங்கர் எழுதிய நூலிலாவது இதற்கு விபரம் காணோம். இன்னும் இவைகளைப் போலொத்த யாழ் வகைகள் பிற்காலத்திலும் தமிழ் நாட்டில் ஏராளமாயிருந்தனவென்று தெரிகிறது. அவைகள் அந்நிய பாஷைகளில் பேர் மாற்றப்பட்டுத் தற்காலத்தில் வழங்கி வருகிறதேயொழிய வடநாட்டில் யாழ் வகைகள் வழங்கி வருகிறதை அதிகமாய்க் காணமாட்டோம். சேர சோழ பாண்டிய நாடுகளிலும் மைசூர் ராஜ்யத்திலும் ஆயிரமாயிரமாக வழங்கி வரும் செங்கோட்டியாழ் என்ற சிறந்த வாத்தியம் தற்காலத்தில் வீணை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் அவைகளை வடநாட்டில் காண்பது அரிது. இருந்தாலும் பூர்வ காலத் தமிழ் மக்கள் வழங்கி வந்த நால்வகை யாழ்களின் இலக்ஷணங்களைச் சொல்வதினால் அவைகளையும் இங்கே சொல்ல வேண்டியதாயிற்று. இக்கல்லாடர் தாம் இயற்றிய கல்லாடம் 13வது அகவலில் (பக்கம் 90) கூறிய "குடக்கோச் சேரன் கிடைத்திது காண்கென மதிமலி புரிசைத் திருமுகங் கூறி யன்புருத் தரித்த வின்பிசைப் பாணன் பெறநிதி கொடுக்கென வுறவிடுத் தருளிய மாதவர் வழுத்துங் கூடற் கிறைவன்" என்னும் அடிகளைக் கவனிக்கையில், சோமசுந்தரக் கடவுள் பாணபத்திரர் பொருட்டுச் சேரமான் பெருமாளுக்குத் திருமுகம் விடுத்த திருவிளையாடலைக் குறிப்பிடுவதாக விளங்குகின்றது. இச் சேரமான் பெருமாள், சைவசமயக்குரவர்கள் மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகளுக்கு நண்பர். சுந்தர மூர்த்தியோ கி. பி. ஒன்பதாவது நூற்றாண்டில் இருந்தவர். ஆதலால் சேரமானைப் பற்றிக் கூறும் இக்கல்லாடர் ஒன்பதாவது நூற்றாண்டில் இருந்தவர். ஆதலால் சேரமானைப் பற்றிக் கூறும் இக்கல்லாடர் ஒன்பதாவது நூற்றாண்டிற்குப் பிற்பட்டவராக இருத்தல் வேண்டுமேயல்லாது சங்க காலத்தவராக இருத்தல் கூடியதல்ல. கல்லாடம் மூலமும் உரையும் பக்கம், 518, 519. "வடமொழி விதித்த விசைநூல் வழக்குட னடுத்தன வெண்ணான் கங்குலி யகத்தினு நாற்பதிற் றிரட்டி நாலங் குலியினுங் குறுமையு நெடுமையுங் கோடல் பெற்றதா யாயிரந் தந்திரி நிறைபொது விசித்துக் கோடி மூன்றிற் குறித்துமணி குயிற்றி யிருநிலங் கிடத்தி மனங்கரங் கதுவ வாயிரத் தெட்டி லமைந்தன பிறப்புப் பிறவிப் பேதத் துறையது போல வாரியப் பதங்கொ ணாரதப் பேரியாழ் நன்னர்கொ ளன்பா னனிமுகம் புலம்ப." நாரதயாழ் - 32 விரலளவு அகலமும் 84 விரலளவு நீளமுமுடையதாய் மூன்று மூலையுடையதாய் 1,000 தந்திகள் பூட்டி மணிகளிழைத்துப் பூமியில் கிடத்திக் கைகளால் தடவி 1,008 நாதங்கள் பிறக்கும்படி வாசிக்கக் கூடிய யாழ். மூன்று மூலையாக என்பதினால் மந்தர, மத்திய தாரமென்னும் மூன்று ஸ்தாயிகளில் சுரம் படிப்படியாய் மேல் போகப் போகத் தீவிரமாகிறதென்றும் தந்திகள் கீழே வரவரக் குறுகிப் போகிறதென்றும் நாம் இதன் முன் பார்த்த முறைப்படி இதுவும் அமைக்கப் பெற்றிருக்க வேண்டும். மந்தர ஸ்தாயியிலுள்ள தந்திகள் நீளமாகவும்
|