பக்கம் எண் :

597
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

எனவே, மிடற்றுவழியது யாழாகலான் மிடற்றுவழிப் பாடலும் யாழ்வழித்தெனக் கொள்க.

‘யாழ்வழித், தண்ணுமை நின்றது தகவே’ யென்பது யாழ்ப்பாடலின் வழியே தண்ணுமையாகிய மத்தள நின்றதென்க.

‘தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே’ யென்பது மத்தளக் கருவியின் பின்வழியே குடமுழா நின்றதென்க.

‘முழவொடு, கூடிநின் றிசைத்த தாமந் திரிகை’ யென்பது முழவொடு கூடிநின்று வாச்சியக் கூறுகளை அமைத்தது ஆமந்திரிகை யென்னுங் கருவி யென்றவாறு.

சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 32.

மதுர கீதம் பாடினண் மயங்கி-தாரங்குரலான மேற்செம்பாலையென்னும் பண்ணைக் கண்டத்தாற் பாடி மயங்கி அப்பண்ணையே யாழினும்பாடிச் செய்வளென்றவாறு. அதனாற் போந்த பொருள் :- நிலம் கலம் கண்ட மென்னும் நெறிமூன்றினும்,

“கண்ட மல்லது நிரம்பக் காட்டக்
கருவிக் கின்பங் கொடுப்ப துமது
பொருவரு நிலத்தைப் புணர்ப்ப ததுவே.”

என்னுஞ் சொல்லகத்தியச் சூத்திரத்தானும் முற்படக் கண்டத்தாலே பாடியெனவும் செம்பாலைப் பண்ணையா ழினும்பாடினாளெனவுங் கொள்க.

இதனால் பூர்வத்தோர் யாழ் வாசிக்கும்பொழுது முதல் முதல் தான் யாழில் வாசிக்கப்போகும் பண்களைக் கண்டத்தினால் அழகாகப்பாடி அது யாழில் வரும்படி பாடிவந்தார்களென்று தெளிவாகத் தெரிகிறது. தற்காலத்திலும் நம்தெருவில் அகப்பைக்கின்னரி விற்கிறவர்கள் தங்கள் வாயினால் ரெங்கா, ரெங்கா என்றும் அண்ணா, அண்ணா என்றும் சொல்லி சொல்லுக் கிணங்கவும் ஓசைக்கிணங்கவும் அக் கின்னரியில் வாசித்துக் காட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். இதனால் கண்டத்தினால் பாடக்கூடிய இசைகள் யாவும் எழுத்துகள் யாவும் யாழிலும் உச்சரிக்கப்படலாம் என்றும் அது தீஞ்சுவை பொருந்தியதாயிருக்கு மென்றும் வாய்ப்பாட்டில்லாத பாடல்கள் உபயோக மற்றவைகள் என்றும் பூரணமற்றவை யென்றும் தெளிவாகத் தெரிகிறது. நிலமென்பது நால்விதயாழில் பிறக்கும் ஏழு சுரங்களையும், கலமென்பது அதற்குரிய யாழையும் கண்டமென்பது சாரீரத்தையும் குறிக்கும். சுரஸ்தானங்கள் நழுவாமல் பாடிக்காட்டுவதே இசைத் தமிழுக்கு அழகென்று வற்புறுத்துகிறார். இச்சூத்திரம் அகத்தியருடைய வாக்கியமென்று கேட்க நாம் மிகவும் சந்தோஷப்படுகிறோம். இன்னும் அங்கங்கே சில சூத்திரங்களிருக்கிறதாகக் கேள்விப்படுகிறோம்.

இயல் இசை நாடகமென்னும் முத்தமிழுக்கும் அவர் சொல்லிய முதல் நூல் மிக நுட்பமானவைகளைச் சொல்லக்கூடியதென்று இதனால் தெரிகிறது.

சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 25.

“இசை யெழுவும் எண்வகையாவன :- பண்ணல் முதலாயின :-

அவற்றுள் :-

பண்ணல் 
1.

“வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்
விலக்கின் றிளிவழி கேட்டு மிணைவழி
யாராய்ந் திணைகொள முடிப்பது
விளைப்பரு மரபிற் பண்ண லாகும்.