| பரிவட்டணை. |
| 2. | “பரிவட் டணையி னிலக்கணந் தானே மூவகை நடையின் முடிவிற் றாகி வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ யிடக்கை விரலி னியைவ தாகத் தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியு நடையொடு தோன்று நயத்த தாகும்” |
ஆராய்தல். |
| 3. | “ஆராய்த லென்ப தமைவரக் கிளப்பிற் குரன்முத லாக விணைவழி கேட்டு மிணையி லாவழிப் பயனோடு கேட்டுந் தாரமு முழையுந் தம்மிற் கேட்டுங் குரலு மிளியுந் தம்மிற் கேட்டுந் துத்தமும் விளரியுந் துன்னறக் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டுந் தளரா தாகிய தன்மைத் தாகும்” |
தைவரல். |
| 4. | “தைவர லென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியு நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி யோவாச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்று மியலா தாகியும் நீர வாகு நிறைய தென்ப” |
செலவு. |
| 5. | “செலவெனப் படுவதன் செய்கை தானே பாலை பண்ணே திறமே கூடமென நால்வகை யிடத்து நயத்த தாகி யியக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப் பதினோ ராடலும் பாணியு மியல்பும் விதிநான்கு தொடர்ந்து விளங்கிச்செல் வதுவே” |
விளையாட்டு. |
| 6. | “விளையாட் டென்பது விரிக்குங் காலைக் கிளவிய வகையி னெழுவகை யெழாலு மளவிய தகைய தாகு மென்ப” |
கையூழ். |
| 7. | “கையூ ழென்பது கருதுங் காலை யெவ்விடத் தானு மின்பமுஞ் சுவையுஞ் செவ்விதிற் றோன்றிச் சிலைத்து வரலின்றி நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்.” |