பக்கம் எண் :

604
தென்னிந்தியாவில் வழங்கிவந்த அபிநயத்தின் சுருக்கம்.

சொக்க மென்பது சுத்த நிருத்தம். அது நூற்றெட்டுக் கரணமுடைத்து. மெய்க்கூத்தாவது தேசி, வடுகு, சிங்களமென மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாகலின், மெய்க்கூத்தாயின. இவை அகச் சுவை பற்றியெடுத்தலின், அகமார்க்கமென நிகழ்த்தப்படும். அகச்சுவையாவன, இராசதம், தாமதம், சாத்துவிக மென்பன.

"குணத்தின் வழியதகக் கூத்தெனப் படுமே" என்றார் குணநூலுடையார்.

"அகத்தெழு சுவையா னகமெனப் படுமே" என்றார் சயந்தநூலுடையாரு

மெனக்கொள்க.

அவிநயக் கூத்தாவது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக் கூத்து.

நாடகம்-கதை தழுவிவருங்கூத்து.

விநோதக்கூத்தாவது குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பர்.

இவற்றுள் :

குரவை என்பது காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது.

"குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமு விறலு
மெய்தக் கூறு மியல்பிற் றென்ப"
என்றாராகவின். குரவை, வரிக்கூத்தின் ஓருறுப்பு; அவை வந்தவழிக் கண்டு கொள்க.

கலிநட மென்பது கழாய்க்கூத்து. குடக்கூத்தென்பது மேற் பதினோராடலுட் காட்டப்படும். கரணமாவது படிந்த வாடல். நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமுமுதலானவற்றை உடையது. தோற்பாவை யென்பது தோலாற் பாவை செய்து ஆட்டுவிப்பது.

இன்னும் நகைத்திறச்சுவை யென்பதனோடு ஏழென்பாருமுளர். அஃதாவது விதூடகக்கூத்து. இதனை வசைக்கூத்தென்பாருமுளர். வசை-வேத்தியல், பொதுவியலென இரண்டு வகைப்படும். அவை முந்து நூல்களிற் கண்டு கொள்க. வெறியாட்டு முதலாகத் தெய்வமேறியாடுகின்ற அத்திறக்கூத்துக்களுங்கூட்டி ஏழென்பாருமுளர். என்னை?

"எழுவகைக் கூத்து மிழிகுலத் தோரை
யாட வகுத்தன னகத்தியன் றானே"
என்றாராகலின்.

13. இவற்றினிலக்கணங்களாவன.

"அறுவகை நிலையும் ஐவகைப் பாதமும்
ஈரெண் வகைய வங்கக் கிரியையும்
வருத்தனை நான்கு நிருத்தக்கை முப்பது
மத்தகு தொழில வாகு வென்ப."
இவை விரிப்பிற் பெருகும்.

13. பல்வகைக் கூத்தாவன :- வென்றிக் கூத்தும், வசைக் கூத்தும், விநோதக் கூத்து முதலியன. என்னை?

"பல்வகை யென்பது பகருங் காலை
வென்றி வசையே விநோத மாகும்."
என்றாராகலின்.

"அவற்றுள், மாற்றா னொடுக்கமு மன்ன னுயர்ச்சியு
மேற்படக் கூறும் வென்றிக் கூத்தெ."