| 13 | தித்திக்குஞ் செந்தேனோ தேம்பாகோ தெள்ளமுதோ புத்திக்கு ளிணையாகப் பொருந்துமெனுஞ் சங்கீத முத்திக்கு வழிகாட்டு முறையனைத்துந் தெளிவித்தே யெத்திக்குங் கொண்டாடு மேற்றமிகு தோற்றமுளோன். |
| 14 | கண்ணளவுக் கடங்காது கற்பகக்காக் களைமேவி யுண்ணமுதச் சுவைக்கனிக ளுதவுமிவன் சோலைவள மெண்ணளவிற் பொருந்துவதோ விசைவேந்தர் கவர்னர் முன்னோர் நண்ணிமிக மகிழ்பூத்து நாவினிக்கப் புகழ்வாரால். |
| 15 | உண்ணீரோ வெனப்பலரை யொருங்கழைத்தின் னுணவளிப்போன் மண்ணீரும் விண்ணீரும் வற்றுகினும் வற்றாத தெண்ணீராங் கிணறுகல்லித் தேகசுகம் பெறவிந்தத் தண்ணீரே போதுமெனத் தக்கவர்சொல் சொற்பெறுவோன். |
| 16 | இல்லார்க்குப் பொன்னளிப்பா னிரங்கிவந்தார்க் குணவளிப்பான் பொல்லாநோ யுடையவர்க்குப் பொருந்துமுயர் மருந்தளிப்பான் பல்லார்க்கும் வேண்டுவன பார்த்துப்பார்த் தினிதளிப்பான் எல்லார்க்கு முபகாரி மிவன்போல்வா ரிலையுலகில். |
| 17 | உண்டிகொடுப் பவர்தமையு முயிர்கொடுப்போ ரென்பர்பிணி மிண்டியிறக் குந்திதியின் மெலிபவருக் கருமருந்து கொண்டுதவி யுயிரையே கொடுக்குமிந்த ஆபிரகாம் பண்டிதமால் செயனோக்கிற் பகர்வதென்னோ வறிகிலமால். |
| 18 | கருணாநந்தப் பெரியோன் கருணைபுரிந் ததைமனத்தி லொருநாளு மறவாமை யுலகறியப் பலமருந்து நிருமாணம் புரிகருணா நிதிவயித்ய சாலைவைத்த பெருமான்றாய் தந்தைநிகர் பெற்றியன்பல் லுயிர்களுக்கே. |