1381. பாலையாழ்த்திறன் வகையின் பெயர். தக்க ராக மந்தாளி பாடை அந்தி மன்றல் நேர்திறம் வராடி பெரிய வராடி சாயரி பஞ்சமம் திராடம் அழுங்கு தனாசி சோமராகம் மேக ராகந் துக்க ராகங் கொல்லி வராடி காந்தாரம் சிகண்டி தேசாக் கிரிசுருதி காந்தா ரம்மிவை யிருபதும் பாலை யாழ்த்திற மென்ப. (இ-ள்.) பாலையாழ்த் திறத்தின் வகையின் பெயர்-நட்டபாடை, அந்தாளிபாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுங்கு, தனாசி, சோமராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிகண்டி, தேசாக்கிரி, சுருதிகாந்தாரம். ஆக 20 1382. குறிஞ்சி யாழ்த்திறன் வகையின் பெயர். நட்ட பாடையந் தாளி மலகரி விபஞ்சி காந்தாரஞ் செருந்தி கௌடி உதய கிரிபஞ் சுரம்பழம் பஞ்சுரம் மேக ராகக் குறிஞ்சி கேதாளி குறிஞ்சி கௌவாணம் பாடை சூர்துங்கராக நாக மருள்பழந் தக்க ராகம் திவ்விய வராடி முதிர்ந்த விந்தள மநுத்திர பஞ்சமந் தமிழ்க்குச்சரி யருட் புரிநா ராயணி நட்ட ராக மிராமக்கிரி வியாழக் குறிஞ்சி பஞ்சமம் தக்க ணாதி சாவகக் குறிஞ்சி யாநந்தை யெனவிவை முப்பத் திரண்டுங் குறிஞ்சி யாழ்த்திற மாகக் கூறுவர். (இ-ள்.) குறிஞ்சியாழ்த்திறன் வகையின் பெயர்-நட்டபாடை, அந்தாளி, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கௌடி, உதயகிரி, பஞ்சுரம், பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கேதாளி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்கராகம், நாகம், மருள், பழந்தக்கராகம், திவ்வியவராடி, முதிர்ந்த விந்தளம், அநுத்திர பஞ்சமம், தமிழ்க்குச்சரி, அருட்புரி, நாராயணி, நட்டராகம், ராமக்கிரி வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவகக்குறிஞ்சி, ஆநந்தை. ஆக 32 1383. மருதயாழ்த்திறன் வகையின் பெயர். தக்கேசி கொல்லி யாரிய குச்சரி நாகதொனி சாதாளி யிந்தளந் தமிழ்வேளர்கொல்லி காந்தாரங் கூர்ந்த பஞ்சமம் பாக்கழி தத்தள பஞ்சம மாதுங்க ராகம் கௌசிகஞ் சீகாமரஞ் சாரல் சாங்கிமம் எனவிவை பதினாறு மருதயாழ்த் திறனே. (இ-ள்.) மருதயாழ்த்திறன் வகையின் பெயர்-தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாகதொனி, சாதாளி, இந்தளம், தமிழ்வேளர்கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்க ராகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம். ஆக 16
|