பக்கம் எண் :

624
பிங்கலந்தையில் வழங்கும் 103 பண்களின் அட்டவணை.

1384. செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர் :-

குறண்டி யாரிய வேளர் கொல்லி
தனுக்காஞ்சி யியந்தை யாழ்பதங் காளி
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர்
பாணி நாட்டந் தாணு முல்லை
சாதாரி பைரவம் காஞ்சி யெனவிவை
பதினாறுஞ் செவ்வழி யாழ்த்திற மென்ப.

(இ-ள்.) செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர்-குறண்டி, ஆரியவேளர் கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி ஆக 16.

1385. மற்றுந்திறத்தின் பெயர் :-

தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி
படுமலை யிவைநூற்று மூன்று திறத்தன.

(இ-ள்.) மற்றுந் திறத்தின் பெயர்-தாரப்பண்டிறம், பையுள்காஞ்சி, படுமலை இம்மூன்றும் நூற்று மூன்று வகைப்படும்.

பிங்கலந்தையில் வழங்கும் 103 பண்களின் அட்டவணை.

பெரும்பண்ணின் வகை 16.

(1)பாலையாழ்(6) தேவதாளி(11) சாயவேளர் கொல்லி
(2)செந்து(7) நிருபதுங்கராகம்(12) கின்னராகம்
(3)மண்டலியாழ்(8) நாகராகம்(13) செவ்வழி
(4)பௌரி(9) குறிஞ்சியாழ்(14) மௌசாளி
(5)மருதயாழ்(10) ஆசாரி(15) சீராகம்
    (16) சந்தி


பாலையாழ்த்திறன் வகை 20.

(1)தக்கராகம் (6)வராடி (11)அழுங்கு (16)கொல்லிவராடி
(2)அந்தாளிபாடை (7)பெரிய வராடி (12)தனாசி (17)காந்தாரம்
(3)அந்தி (8)சாயரி (13)சோமராகம் (18)சிகண்டி
(4)மன்றல் (9)பஞ்சமம் (14)மேகராகம் (19)தேசாக்கிரி
(5)நேர்திறம் (10)திராடம் (15)துக்கராகம் (20)சுருதி காந்தாரம்


மருதயாழ்த்திறன் வகை 16.

(1)தக்கேசி(6) இந்தளம்(11) தத்தள பஞ்சமம்
(2)கொல்லி(7) தமிழ் வேளர்கொல்லி(12) மாதுங்க ராகம்
(3)ஆரியகுச்சரி(8) காந்தாரம்(13) கௌசிகம்
(4)நாகதொனி(9) கூர்ந்த பஞ்சமம்(14) சீகாமரம்
(5)சாதாளி(10) பாக்கழி(15) சாரல்
    (16) சாங்கிமம்