பக்கம் எண் :

627
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

திருஞானசம்பந்தர் தேவாரப் பண்கள்.

1.நட்டபாடை     ........ 8கட்டளை11. நட்டராகம் ........ 2கட்டளை
2.தக்க ராகம்     ........ 7   "12. செவ்வழி ........ 1   "
3.பழந்தக்க ராகம் ........ 3   "13. காந்தார பஞ்சமம் ........ 3   "
4.தக்கேசி        ........ 2   "14. கொல்லி ........ 4   "
5.குறிஞ்சி        ........ 5   "15. கௌசிகம் ........ 2   "
6.வியாழக் குறிஞ்சி.... 6   "16. பஞ்சமம் ........ 1   "
7.மேகராகக் குறிஞ்சி.... 2   "17. சாதாரி ........ 9   "
8.இந்தளம்       ........ 4   "18. புறநீர்மை ........ 1   "
9.சீகாமரம்       ........ 2   "19. அந்தாளி ........ 1   "
10.பியந்தைக் காந்தாரம்.... 3   "    

திருநாவுக்கரசு தேவாரப்பண்கள்.

20.நேரிசை .... 2 கட்டளை21.குறுந்தொகை .... 1 கட்டளை22.தாண்டகம்.... 1 கட்டளை

சுந்தரமூர்த்தி தேவாரப்பண்கள்.

23.இந்தளம்........ 2கட்டளை  31.நட்டபாடை........ 2கட்டளை
24.தக்க ராகம்........ 2    "  32.புறநீர்மை........ 2    "
25.நட்டராகம்........ 2    "  33.சீகாமரம்........ 1    "
26.கொல்லி........ 3    "  34.குறிஞ்சி........ 2    "
27.பழம்பஞ்சுரம்........ 2    "  35.செந்துருத்தி........ 1    "
28.தக்கேசி........ 6    "  36.கௌசிகம்........ 2    "
29.காந்தாரம்........ 2    "  37.பஞ்சமம்........ 1    "
30.காந்தார பஞ்சமம்........ 1    "     

மேற்கண்ட இராகப் பெயர்களைக் கவனிக்கையில் பூர்வமான இராகங்களின் பெயர்கள் காலத்துக்குத் தகுந்த விதமாய் வரவர மாற்றப்பட்டு வழங்கி வந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. பிங்கல முனிவர் சொல்லியிருக்கும் இராகங்களுக்கும் தேவாரத்தில் வழங்கிவரும் இராகங்களுக்கும் பெயரிலும் தொகையிலும் வித்தியாசமிருப்பதாகக் காண்போம். இவ்விரண்டின் காலத்திற்கும் பின்னுள்ளதாகக் காணப்படும் சங்கீத ரத்னாகரத்தில் வழங்கிவரும் இராகங்களில் மிகுதியானவை தமிழ் நாட்டுப் பண்களை அனுசரித்தவைகளாகவே காண்போம். அவைகளில் இராகாங்க இராகங்கள் என்று அவர் சொல்லும் 31ல் 21 இராகங்கள் பூர்வம் தமிழ் நாட்டில் வழங்கி வந்த இராகங்கள் என்றும் அவைகளின் பிரிவுகளென்றும் உபாங்க பாஷாங்க இராகங்களில் அநேக இராகங்கள் தமிழ் நாட்டு இராகங்களென்றும் தெரிகிறது. அடியில் வரும் அட்டவணையால் அவைகளிற் சிலவற்றைக் காணலாம்.