பக்கம் எண் :

629
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

3.

சுத்த கௌசிகம்

 7.

கௌடகௌசிக
    மத்யமம்

 18.

மாளவ கௌசிகம்

4.பின்ன கௌசிகமத்யமம்  9.கௌட கௌசிகம்  25.சுத்த கௌசிக மத்யமம்
6.பின்ன கௌசிகம்  16.ஷட்ஜ கௌசிகம்  31.டக்க கௌசிகம்

மேற்காட்டிய சில இராகங்களை நாம் கவனிக்கையில் பன்னிரு பாலையுரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாக பண்கள் 103 ஆயிற்று என்று சொன்ன பூர்வ முறைப்படி 103 பண்களும் இராகங்களென்று சொல்லப்படுகின்றன. அவைகளில் சிலவற்றைத் தாய் இராகங்களாகவும் சிலவைகளை ஜன்னிய இராகங்களாகவும் காண்கிறோம். மேலும் கர்நாடக பாஷாங்க இராகம் என்றும் திராவிட பாஷாங்க இராகமென்றும் தக்ஷண பாஷாங்க இராகமென்றும் தமிழ்நாட்டில் வழங்கி வந்த பண்களையே சொல்லுகிறார். அவற்றோடு கர்நாடகம், திராவிடி, தக்ஷணகுச்சரி, திராவிடகுச்சரி, கர்நாடக பங்காளம் என்று சொல்வதையும் நாம் தமிழ்நாட்டுக்குரிய பண்களென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இன்னும் டக்க விபாஷா தேவாரவர்த்தனி மாளவ கைசிக தேவாரவர்த்தனி பின்ன ஷட்ஜவிபாஷா தேவாரவர்த்தினியென்று அவர் அங்கங்கே சொல்வதை நாம் கவனிக்கையில் இவைகள் தேவாரப் பண்களில் வழங்கி வரும் தமிழ் இராகங்கள் என்று தெளிவாகக் காண்கிறோம்.

தமிழ்நாட்டுத் தேவாரப் பண்கள் கி. பி. 4ம் நூற்றாண்டிலிருந்தவராகச் சொல்லப்படும் மாணிக்கவாசகராலும் 7ம் நூற்றாண்டிலிருந்த அப்பர், சம்பந்தராலும் 9ம் நூற்றாண்டிலிருந்த சுந்தரமூர்த்திகளாலும் சொல்லப்பட்டவையென்று நாம் அறிவோம். சங்கீத ரத்னாகரரோ கி. பி. 13ம் நூற்றாண்டிலிருந்தவரென்றும் கி. பி. 1247க்குள் சங்கீத ரத்னாகரம் அவரால் எழுதப்பட்டதென்றும் தெரிகிறது. ஆகையினால் தமிழ் நாட்டுப் பண்களிற் சிலவற்றையும் மற்றும் சில பாஷாங்க தேசாங்க இராகங்களையும் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. டக்க என்கிற பெயர் தக்க என்ற தமிழ்ப் பண்ணின் பெயர். டக்க விபாஷா தேவாரவர்த்தனி என்று அவர் சொல்வதைக் கவனிக்கையில் தேவாரத்தில் சொல்லப்படும் தக்க இராகமே அது என்று தெளிவாக அறிகிறோம். தக்க என்பது டக்க என்று திரிந்தது போல, நட்ட ராகம் என்பது நாட்டை என முதல் எழுத்து நீண்டும், சாதாரி என்பது ரூபசாதாரி, சுத்தசாதாரி என ஒரு பதம் முன் சேர்க்கப்பட்டும், வைரவம், இந்தளம், குறிஞ்சி, என்பன பைரவி, இந்தோளம், குராஞ்சி என விகாரப்பட்டும், தனாசியென்பது தன்னியாசியென்று சில எழுத்துக்கூடியும், நிருபதுங்க ராகம் என்பது நிருபதராகம் என நடுவெழுத்து மாறியும், அநேக இராகங்கள் பெயர் மாற்றப்பட்டு வழங்கி வருவதை அங்கே காண்கிறோம்.

முடிவாக இவர் சற்றேறக்குறைய முதலாவது நூற்றாண்டிலிருந்த இளங்கோவடிகளுக்கும் 5வது நூற்றாண்டிலிருந்த பரதருக்கும் 4ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரையுள்ள தேவார காலத்திற்கும் 11ம் நூற்றாண்டிலிருந்த கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டானுக்கும், 12ம் நூற்றாண்டிலிருந்த அடியார்க்கு நல்லார்க்கும் பிற்காலமாகிய 13ம் நூற்றாண்டிலிருந்தவரென்று தெளிவாகத் தெரிகிறது. டக்க விபாஷா தேவார வர்த்தனி என்பதைக் கொண்டு இவர் கர்நாடக சங்கீதத்தின் பல அம்சங்களைக் கலந்து தேவார காலத்திற்குப் பிற்பட்டே இந்நூல் எழுதியிருக்கிறாரென்றும் தெளிவாக அறிகிறோம். இதனால் சங்கீத சாஸ்திரமாக பரதர் எழுதிய நூலுக்கும் சங்கீத ரத்னாகரருக்கும் பல்லாயிர வருஷங்களுக்கு முன்னேயே இசைத் தமிழ் நூல்கள் பல இருந்தனவென்றும், பரதர், சங்கீத ரத்னாகரருடைய காலங்களில்