பக்கம் எண் :

631
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

கிராம இராகங்களிலிருந்து பாஷாங்க இராகங்களும் பாஷாங்க இராகங்களிலிருந்து விபாஷா இராகங்களும் விபாஷா இராகங்களிலிருந்து அந்தரபாஷா இராகங்களுமுண்டாயின.

சப்தசுரங்களிலும் மூன்று கிராமங்களிலும் 21 மூர்ச்சனைகளிலும் 22 சுருதிகளிலுமிருந்து இராகம் தோன்றுகிறது.

ஷட்ஜாதியாக சுரம் ஏழு. ஷட்ஜ மத்திம கிராமங்கள் இரண்டு. சிலர் காந்தாரத்தைக் கூட கிராமமாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அது பூதலத்தில் இல்லை.

சுருதிகள் பதினாலும், மூர்ச்சனைகள் பதினாலும், பூமியில் மனுஷரால் பாடப்படுகின்றன. மற்றவை சொர்க்கத்தில் பாடப்படுகின்றன.

நிஷாத காந்தாரங்கள் உச்சத்திலும், ரிஷப தைவதங்கள் நீசத்திலும், ஷட்ஜம மத்திம பஞ்சமங்கள் சுவரிதத்திலுமிருக்கின்றன.

1. பஞ்சமம் மத்திமம் என்னும் இரு சுரங்கள் ஆஸ்யம் சிங்காரம் என்னும் ரசங்களைக் கொடுக்கும்.

2. ஷட்ஜம ரிஷபங்கள் வீரரசத்தையும் ரௌத்ர ரசத்தையும் அற்புத ரசத்தையும் காட்டும்.

3. காந்தார நிஷாதங்கள் கருணாரசத்தில் வழங்கும். தைவதம் பீபத்சம் பயாநகம் என்னும் ரசங்களில் பாடப்படும்.

4. ஷட்ஜாதியான சப்த சுரங்களுக்கும் 4, 3, 2, 4, 4, 3, 2 என்ற சுருதிகள் வரும்.

இனிமேல் 36 இராகங்களின் உற்பத்தியைப் பற்றிச் சொல்லுகிறேன்.

1.

பைரவம்

 3. நாடம்  5.கௌடமாளவம்
2.பஞ்சமம்  4.மல்லாரம்  6.தேஷாஸம்.

இந்த ஆறு இராகங்களும் உலகப் பிரசித்தியாய்ச் சொல்லப்படுகின்றன. இவைகள் ஒவ்வொன்றிலுமிருந்துண்டாகும் இராகங்களைச் சொல்லுகிறேன்.

I  பைரவத்தைச் சேர்ந்தவை. IIIநாடம்.  V.கௌடமாளவம்.
1.

வங்கபாலம்

 1.

நடநாராயணம்

 1.

இந்தோளம்

2.குணகரி 2.பூர்வகாந்தாரம் 2.திருகுணா
3.மத்தியமாதிவசந்தகம் 3.சாளகம். 3.தாளி
4.தன்னியாசி 4.கர்நாடகம் 4.கௌடி
5.சீராகம் 5.கேதாரம் 5.கோலாகலம்
        
IIபஞ்சமம்.IV. மல்லாரம்.VI.தேஷாஸம். 
1.லலிதா  1.

மேகமல்லாரிகை.

 1.

பூபாளி

2.குச்சரி 2.மாளவம் 2.அரபாலம்
3.தேசி 3.கௌசிகம் 3.காமோதி
4.விராடி 4.பிரதிமஞ்சரி 4.தோரிணம்
5.ராமக்கிரியை 5.அசாவேரி 5.வேளாவளி