இது நிற்க மிகப்பூர்வமான நூல்களில் வழங்கிவரும் இராகங்களைச் சொல்லுகிறேன். | 1. | பைரவம் | 3. | இந்தோளம் | 5. | மேகநாதம் | | 2. | மாளவ கௌசிகம் | 4. | தீபகம் | 6. | ஸ்ரீராகம் |
இவைகள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து ஐந்து ஸ்திரீ ராகங்களுண்டு. அவையாவன :- | I | பைரவம் | II. | மாளவ கௌசிகம் | III | இந்தோளம் | | 1. | பைரவி | 1. | விசித்திரை | 1. | வைராவளி | | 2. | நடபைரவி | 2. | பாவினி | 2. | பாராதோடி | | 3. | மாலஸ்ரீ | 3. | மாரவணி | 3. | தேசாக்கியை | | 4. | படமஞ்சரி | 4. | இராமக்கிரி | 4. | சணவாரிகை | | 5. | லளிதை | 5. | கூர்ஷரி | 5. | மாதவி | | | | | | | | | IV. | தீபகம். | V. | மேகநாதம். | VI. | ஸ்ரீராகம். | | 1. | தனாசரி | 1. | களாடிகை | 1. | வங்காளி | | 2. | வசந்த | 2. | கௌரி | 2. | மேகசாலி | | 3. | கர்நாடி | 3. | ககுபா | 3. | மோதகா | | 4. | வைராடி | 4. | விபாவரி | 4. | சாமா | | 5. | மதுகரி | 5. | கௌடி | 5. | அசாவேரி |
இவ்விராகங்களில் ஆறு பருவத்திற்கும் இன்ன இன்ன இராகங்கள் பாட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. | 1. | மாசி பங்குனி மாதங்களில் தீபகமும். | 4. | ஆவணி புரட்டாசியில் மாளவகௌசிகமும், | | 2. | சித்திரை வைகாசியில் மேகநாதமும், | 5. | ஐப்பசி கார்த்திகையில் பைரவமும், | | 3. | ஆனி ஆடியில் சீராகமும், | 6. | மார்கழி தையில் இந்தோளமும் பாடவேண்டும்." |
மேற்கண்ட வசனங்களில் காணப்படும் பரதருடைய கருத்தை அனுசரித்தே சாரங்கர் சில பாகங்கள் சொல்லியிருக்கிறார் என்பதாகக் காண்கிறோம். மேலும் இவை பரத சாஸ்திரத்தில் காணப்படும் விஷயங்களின் சுருக்கம் என்று சொல்லுகிறார். இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகளுண்டு. 1. சாமவேத்திலிருந்து சுரங்கள் உற்பத்தியாயின என்று சொல்லுகிறார். இதைக் கொண்டு ரிக்கு வேதத்திற்குச் சுரங்களில்லையென்று நாம் நினைக்கக் கூடாது. சாமவேதமும் ரிக்குவேதம் போலவே சொல்லப்பட்டு வந்தது. த, நி, ச, ரி, க என்ற ஐந்து சுரங்களில் ரிக்குகள் பூர்வகாலத்தில் சொல்லுவது வழக்கம். ஆனால் இராவணன் கர்நாடக சங்கீத முறைப்படி காந்தாரத்திற்கு மேலும் தைவதத்திற்குக் கீழும் வரக்கூடிய ப, ம என்ற இரண்டு சுரங்களைச் சேர்த்து ப, த, நி, ச, ரி, க, ம என்று ஒரு ஸ்தாயியைப் பூர்த்தி பண்ணி கானம் பண்ணினான். அதோடு சப்த சுரங்களிலிருந்து வரும் அரை அரை சுரங்களையும் அவற்றிலிருந்துண்டாகும் பல அனுசுரங்களையும் சேர்த்து இனிமையான வெவ்வேறு இராகங்களில் வெவ்வேறு சாகைகளைப் பாடினான். இவன் பாடிய பிறகு மற்றவர்களும் அப்படியே கானம் பண்ணிக்கொண்டு வருகிறார்கள். ஏழு சுரங்களும் அவைகளிற்றோன்றும் விக்ருதி சுரங்களும் சாமவேதத்தில் வழங்கி வரும்படி செய்ததில் இராவணனே முந்தினவன். இவன் வழங்கிய சுரங்கள் கர்நாடக சங்கீதத்தில் இவனுக்கு முன்பேயுள்ளவை.
|