பக்கம் எண் :

633
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

தமிழ் நாட்டைத் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று படையெடுத்துச் சென்ற இராவணனை அகத்தியர் கந்தர்வத்தினால் (சங்கீதத்தால்) ஜெயித்து தமிழ்நாட்டில் அவனை அடிவைக்காமற் செய்தாரென்று பூர்வ தமிழ் நூல்களில் காண்கிறோம். பூர்வகாலத்திய அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டை செய்ய நேரிடுகையில் தாங்கள் ஆயுதங்களினால் சண்டை செய்யும் பொழுது குடிகள் அழிந்து போகாதிருக்கவும் பிராணச்சேதம் நேர்ந்து அதினால் தங்கள் பூமிக்குச் சாபம் நேரிடாதிருக்கவும் வேண்டுமென்பதை உத்தேசித்துத் தங்கள் தங்கள் சேனைகளில் அதிக பலசாலியான இருவரைத் தெரிந்து அவர்களில் எவன் மற்றவனை ஜெயிக்கிறானோ அவன் பக்கத்தாரே ஜெயமடைந்ததாகவும் தோல்வியடைந்தவன் பக்கமே அப ஜெயமடைந்ததாகவும் தீர்த்துக் கொள்வது வழக்கம். அப்படியே இராவணனும் அகத்தியரும் கலைகளிற் சிறந்ததாகிய சங்கீதத்தில் ஒருவரையொருவர் வெல்வதற்குப் போராடி அகத்தியரே அதில் வெற்றி பெற இராவணன் தன் வாக்கின்படி தமிழ்நாட்டை விட்டு விலகினானென்று அடியில் வரும் சில வரிகளினால் நினைக்க ஏதுவிருக்கிறது.

பத்துப்பாட்டில் ஆறாவதும் மாங்குடி மருதனாரியற்றியதுமாகிய மதுரைக்காஞ்சி, பக்கம். 183.

"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுட் பின்னர் மேயபொருந"

(இ-ள்) இராவணனைத் தமிழ்நாட்டை யாளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோராயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே.

"இதனால் அகத்தியனுடன் தலைச்சங்கத்துப் பாண்டியனிருந்து தமிழாராய்ந்த சிறப்புக் கூறினார்." என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும்,

தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம் நச்சினார்க்கினியர் உரை.

"பொதியிலின்கணிருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டியங்காமை விலக்கி" என்னும் உரையாலும் அறியப்படுகின்றது.

இதனால், பாண்டியர்கள் தமிழ்நாட்டை அரசாட்சி செய்து கொண்டிருக்கையில், பாண்டிய நாட்டின் மீது அசுரக் கூட்டத்தோடு படையெடுத்து வந்த இராவணன், ‘ஒப்பற்ற சங்கீத வித்தையில் என்னை வெல்பவர் இந்நாட்டிலிருந்தால் இசைவாது செய்ய வரலாம்’ என்று சொல்ல, அப்பொழுது பாண்டியன் அவையத்து முத்தமிழில் சிறந்து விளங்கிய வித்துவசிரோமணியாகிய அகத்தியமாமுனிவர் இசைவாதில் இராவணனை வென்றார் என்பதும், இராவணன் காலத்திற்கு முன்னேயே தமிழ்நாடு இசைத் தமிழிற் சிறந்திருந்ததென்பதும் விளங்குகின்றது.

"தென்னா தெந்தின, தென்னா தெந்தின
தினத்தேந்தின தினனா-"

என்று நாளது வரையும் வழங்கி வரும் வாய்ப்பாட்டைக் கவனிக்கையில் தென்னாட்டில் தென்மதுரையில் மிகப் பிரபலமாய் ஆண்டு கொண்டிருந்த தென்னவன் அதாவது பாண்டியனால் அல்லது ஒரு பாண்டிய அரசனை ஞாபகப்படுத்துவதற்காக இம்முறை வழங்கி வந்ததென்று சொல்லலாம். ஆளத்தி செய்யும் பொழுதும் தென்னா, தெனாவென்று பாடப்படுமென்று சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆதியில் ஒன்றாயிருந்த ரிக்கு வேதம் இராவணனுடைய பாடலுக்குப் பின்பே சாம வேதமாகப் பிரிக்கப்பட்டதென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். சாம