பக்கம் எண் :

636
பரதர் நூலிலுள்ள சில இராகங்களும் அவைகளின் விபரமும்.

இவைகளில் தொடங்கிப்பாடும் பண்கள் மிக இனிமையுடையதாய்க் கேட்கிறவர்கள் மனதை உருகச் செய்யும். கல் போன்ற மனதைக் கரைத்து இரக்கம் உண்டாக்கிவிடும். இவ்விரு சுரங்களும் வாதி சம்வாதியாக வரும். தாரக்கிராமமே பாலையாழ் என்பதாக இதன் முன் பார்த்திருக்கிறோம். இதைக் கடைச்சங்கப் புலவருள் முடத்தாமக்கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப்படை பக்கம் 41ல்

"ஆறலை கள்வர் படையிட வருளின்
மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை"

(இ-ள்) வழியை யலைக்கின்ற கள்வர் தங்கையிற் படைக்கலங்களைக் கைவிடும்படி அருளினது மாறாகிய மறத்தினையவர்களிடத்து நின்று பெயர்க்கும் மருவுதலினிய பாலையாழை." என்று சொல்லியிருக்கிறார்.

பத்துப்பாட்டில் மூன்றாவதும் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியதுமாகிய சிறுபாணாற்றுப்படை

பக்கம் 68.

"நைவளம் பழுநிய நயந்தெரி பாலை"

(இ-ள்) நட்டபாடை யென்னும் பண் முற்றுப் பெற்ற இனிமை தெரிகின்ற பாலை" என்கிறார்.

மேற்கண்ட பாடல்களியற்றிய புலவர்களை, கிறிஸ்துவுக்கு முன் சற்றேறக்குறைய 2,000 வருஷங்களாயிருந்த கடைச்சங்கப் புலவர்கள் என்று நாம் அறிவோம். அக்காலத்திலேயே தாரங்குரலான பாலையாழ் வழங்கி வந்ததென்றும் அப்பாலையில் தாரம் கிரக சுரமாகப் பாடப்பட்டு வந்த தென்றும் அது பகைவர்களின் கடின சித்தத்தை மாற்றி அவர்களின் மனதை இளகும்படி செய்தது என்றும் சொல்லப்படுகிறது. இப்படியே ஒவ்வொரு சுரத்திற்கும் ஒவ்வொரு பண்ணுக்கும் வெவ்வேறு விதமான சுவையிருந்த தென்றும் அவற்றை ஏற்ற காலங்களில் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கிறார்களென்றும் இதினால் அறிகிறோம். கி. பி. 5ம் நூற்றாண்டிலிருந்த பரதருக்கும் இவர்கள் வெகு காலத்திற்கு முன் (குறைந்தது 1,000, 2,000 வருஷங்களுக்கு முன்னாவது) இருந்திருக்க வேண்டும்.

8. பரதர் காலத்தில் வழங்கி வந்த ஆறு தாய் இராகங்களையும் அவற்றின் கிளை இராகங்களையும் கவனிப்போமானால் பைரவம், பஞ்சமம், நாடம் அல்லது நாட்டை, தன்னியாசி (தனாசி), சீராகம் (ஸ்ரீராகம்), நடநாராயணம் (நாராயணி), குச்சரி, பூர்வகாந்தாரம், கர்நாடம், மேகமல்லாரிகை, (மேகராகம்), கௌசிகம், இந்தோளம், விராடி (வராடி), கௌடி, வேளாவளி என்னும் இராகங்களைப் பிங்கல முனிவர் காலத்திலிருந்த இராகங்களாகக் காண்போம். தமிழ் மக்கள் வழங்கி வந்த பண்களில் அநேகம் இங்கே காணப்படுதலினால் தமிழ் மக்களின் சங்கீதத் தேர்ச்சிக்குப் பிறகே இவர் நூல் எழுதியிருக்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது.

9. பரதர் தாம் சொல்லும் 36 இராகங்களுக்கு முன்னதாக மிகப் பூர்வமானதென்று நூல்களிற் சொல்லப்படும் 6 தாய் இராகங்களையும் அவற்றின் ஜன்னிய இராகங்களையும் சொல்லுகிறார். அவைகளும் தொகையில் 36 ஆக வருகின்றன என்று சொல்லுகிறார். அவைகளில் (1) பைரவம், (2) மாளவ கௌசிகம், (3) இந்தோளம், (4) மேகநாதம் (மேகராகம்) (5) ஸ்ரீராகம் (சீராகம்) என்னும் 5 தாய் இராகங்களும் தமிழ் நூல்களில் காணப்படும் பூர்வ இராகங்களே. மேற்காட்டிய தாய் இராகங்களுள் பைரவி, குர்ஷரி, தனாசரி, கர்நாடி, கௌடி என்னும் இராகங்களும் பூர்வம் தமிழ் மக்கள் வழங்கி வந்த இராகங்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. தமக்கு வெகு காலத்திற்கு முன்னுள்ள சாஸ்திரங்களில் கூறும் இராகங்களென்று