சொல்லும் 6 தாய் இராகங்களில் ஐந்து தாய் இராகங்கள் அதாவது மேகநாதம், சீராகம், கௌசிகம், வைரவம், இந்தோளம் என்னும் இராகங்கள், இசைத்தமிழில் வழங்கி வந்த இராகங்களென்றும், தமிழ் மக்கள் பாடி வந்தவையென்றும், பரதர், பூர்வகால சாஸ்திரங்களிலுள்ளவையென்று சொல்வது இவைகளையே என்றும் இங்கே கவனிக்க வேண்டும். சங்கீத கிரந்த கர்த்தாக்களில் முதல்வராக எண்ணப்படும் பரதரே இப்படிச் சொல்வாரானால் மற்றவர்கள் என்ன சொல்ல இருக்கிறது? 10. பரதர் பூர்வீக இராகமென்று சொல்லும் ஆறு தாய் இராகங்களையும் வருஷத்தின் ஆறு பருவங்களிலும் பாடத் தகுந்தவையென்று சொல்வதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். இவைகள் தமிழ் இராகங்களாயிருப்பதைக் கொண்டும் இவற்றைப் பூர்வம் என்று சொல்வதைக் கொண்டும் பூர்வம் தமிழ் மக்கள் ஒரு வருஷத்தை ஆறு பருவங்களாக வகுத்து அவைகளில் அந்தந்த பருவங்களுக்கேற்ப இராகங்களையும் அவற்றின் ஜன்னிய இராகங்களையும் பாடும் நெறியுடையவர்களாய் இருந்திருக்கிறார்களென்றும் மிகத் தெளிவாகக் காண்கிறோம். முடிவாக, பரதர் எழுதிய சங்கீதத்தின் முக்கிய அம்சங்களைக் கவனிக்கையில் அவை இசைத் தமிழில் வழங்கி வந்தவைகளேயென்றும் இசைத் தமிழில் வழங்கி வந்த பண்களேயென்றும் இசைத் தமிழில் சொல்லப்படும் கிராமங்களிலும் அவற்றிற்குரிய அலகுகளிலும் பேதங்கொண்டு சந்தேகப்பட்டாரென்றும் தெளிவாகக் காண்கிறோம். இன்னும் காண்போம். சங்கீத ரத்னாகரர் தேவார வர்த்தினி என்று சொல்வதைக் கவனிக்கையில் அவர் தேவார காலத்திற்குப் பின்னாக இருந்தவரென்றும் பரதர் அவ்விராகங்களைத் தம் நூலில் சொல்லாததினால் தேவாரப் பண்கள் உண்டாவதற்கு முன்னிருந்தவரென்றும் நாம் ஊகிக்க இடமிருக்கிறது. திருவாசகத்திற்கு முதல்வரான மாணிக்கவாசகர் கி. பி. 4-வது நூற்றாண்டிலிருந்தவராகச் சொல்லப்படுகிறார். ஆனால் பரதரோ 5-வது நூற்றாண்டிலிருந்தவர். 6. Mr. இராமநாதன் பதிப்பித்த அகராதியில் காணப்படுகிற பண்கள். பாலைப் பண்ணின் திறம் 5. பக்கம் 483. | 1. | தக்க ராகம். | 3. | காந்தார பஞ்சமம். | 5. | காந்தாரம். | | 2. | நேர்திறம். | 4. | சோம ராகம். | | |
வெண்பா. "தக்கராக நேர்திறங் காந்தார பஞ்சமமே துக்கழி சோமவி ராகமே-மிக்கதிறற் காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார் பூந்தா ரகத்தியனார் போந்து." பாலையாழ்த்திறம் 5. பக்கம் 483. | 1. | அராகம். | 3. | உறுப்பு. | 5. | நேர்திறம். | | 2. | ஆசான். | 4. | குறுங்கலி. | | |
|