பக்கம் எண் :

76

29 

சுருதியறு நான்கெனற்குக் கணக்குநியா யமுமெடுத்துச் சொல்லி யாருஞ்
சரிசரியென் றிடப்பெற்றுத் தான்செய்கரு ணாமிருத சார நூலின்
மருவுபல விஷயமும் வியாசமா வாசித்தம் மன்னன் முன்னே
பிரியமுற வரங்கேற்றப் பெற்றதெனின் மற்றிதன்சீர் பேசற் பாற்றோ.
 

30 

இடமுதவிப் பொருளுதவி யேவலா ளரையுதவி யினிய கூறி
யுடலிலுள பிணியகல மருந்துதவி யுபகரிப்பா ருண்டோ வுண்டோ
கடலுலகி லிவையனைத்தும் ஆபிரகாம் பண்டிதன்பாற் கண்டோங்கண்டோந்
திடசுகச ரீரசம்பத் தாதியுட னிவன்வாழ்க செகத்தின் மன்னோ.
 
 

சென்னை வெஸ்லிகாலேஜ் தலைமைத்தமிழ்ப்புலவர்

மகா---ஸ்ரீ திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள்

இயற்றியது.

நேரிசையாசிரியப்பா

5.

இசைவடி வாகு மசைவிலாப் பொருளில்
தோன்றிப் பன்மொழி யீன்ற வெங்கன்னி !
மிடற்றி லிசையு மிடநாவி லியலும்
விழிகை யாடலுங் கெழுமிய வன்னாய் !
வடவரை நீரிற் கிடந்த நாளினு 

10.


நிலமாய்த் தென்கட னிலவிய நாளினும்
வயங்கு தொன்மை யியங்கப் பெற்றவனை
ஊரூர் தோறு மூர்ந்து புகுந்தே
நாடுக டோறு நாடி யடைந்தே 

15 


வாக்கே யாண்டும் வழங்கச் செய்தே
மாக்கள் பலரையு மக்க ளாக்கினை
மூன்று கழகமு மான்ற புலவரும்
அன்பு நூலொடு மின்புறக் கண்டனை
முன்னை யூழோ பின்னைப் பிறரில்
செறிந்திய லுறுப்பைச் சிறிதே யிழந்தனை 

20


ஆட லிசையெனு நாடரு முறுப்போ
மாற்றார் வயப்பட வாற்றா தயர்ந்தனை
இசையுறுப் பில்லா ஏழையென் றுன்னை
வசையுங் கூறி வழக்கை வீழ்த்தினர்
நின்பெருஞ் சேய்பலர் நின்னை மறந்தே 


அன்னவர்ப் போற்று மன்னவ ராயினர்
இந்தப் போழ்தினிற் செந்தமிழ்ச் செல்வி !
நின்னிசை யோங்கி முன்னிலை பெறவே
ஒருவ னெழுந்தே யரும்பண் ணூலொடு