பக்கம் எண் :

77

25

*நிலநீர் விலங்கே யொலிநூல் பலவும் 

30
ஆய்ந்தாய்ந் தடிக்கே வேய்ந்தன னின்று
கருயா மிர்தசா கரமெனு மோரணி
அவ்வணி யிடையே செவ்விய சுருதி
இருபா னான்கெனு மிரும்பழங் கோண்மணி
பொலிவுற வமைத்தனன் புலவர்கண் மகிழ
35


அன்னவ னெவனெனிற் சென்னி நாட்டிடைத்
தஞ்சையி லுறையுஞ் செஞ்சொ லாளன்
கருணா னந்த னருண்மிகப் பெற்றோன்
கல்விப் பொருளுஞ் செல்வப் பொருளுஞ்
சால நிரம்பிய மேலவ னவையும்

40


பிறர்க்குப் பயன்பெற வறச்செயல் கொண்டோன்
மருந்து நூற்கட லருந்திய வறிஞன்
நாணூல் கோணூல் பேணும் பெரியோன்
யாழின் புலமையும் ஏழின் புலமையுந்
தோற்றிய தந்தை சாற்று தமிழுயிர்


உண்மை வழுவா நண்பன்
ஆபிர காம மாபுல வோனே.
* Geology Zoology Philology.
 

சித்தாந்தசரபம் அஷ்டாவதானம்,

சிவஸ்ரீ - கலியாணசுந்தரயதீந்திர சுவாமிகள் இயற்றியது.

பற்பலவா யிரமாயி ரம்வருடங் கட்குமுனர்ப் பரத கண்டம்
   பரவியவோர் தனிமொழியா யொப்பிலதா யமிழ்தினுநற் பண்பு வாய்ந்து
பொற்புறுசங் கீதசுவை யுடனுலவி நாகரிகப் புலமை வீசிப்
   புறமொழிக ளுற்பத்திக் காதார மாவிளங்கிப் போற்ற யாரும்
அற்புதம்வி ளைத்ததமி ழொன்றேயென் றதனுண்மை யாராய்ந் தோர்ந்தே
   யதற்காதா ரங்களெண் ணிலவாக வேகாட்டி யாரு மெச்ச
நற்புவியி லுயர்கருணா மிர்தசா கரமெனுநூ னாட்டி வாய்மை
   நவின்றிட்டான் தஞ்சைராவ் சாகேப்ஆ பிரகாம்நன் னாவ லோனே.