பக்கம் எண் :

643
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

மேற்கண்ட செய்யுளில் சொல்லப்படும் தலைமை பற்றிய இராகங்களின் அட்டவணை.

(இ-ள்)
 

மேக விரஞ்சிபடமஞ்சரிகௌளிதேசி
குறிஞ்சிநாராயணிகாந்தாரிசாரங்கம்
பூபாளம்நாட்டைகாம்போதிதோடி
கைசிகம்வசந்தம்இலலிதைஇராமக் கிரியை
வராளிபௌளிதேவக்கிரியைவேளாவளி
மலஹரிசீராகம்தேசாக்ஷரிபைரவி
பல்லதிபங்காளம்மாளவிகுண்டக் கிரியை
இந்தோளம்கூர்ச்சரிசாவேரிதன்னியாசி

இவர் தாம் எழுதிய நூலுக்கு அகத்தியர் எழுதிய பரதம் ஆதாரமாயிருந்ததென்றும் அதைச் சுருக்கி எழுதுகிறேனென்றும் சொல்லுகிறார். சற்றேறக் குறைய 200 வருஷங்களுக்கு முன்னுள்ள இவர் காலத்து வழங்கி வந்த இராகங்களுக்கும் சங்கீத ரத்னாகரருடைய காலத்தில் வழங்கி வந்த இராகங்களுக்கும் சில ஒற்றுமை இருப்பதாகக் காண்போம். ஆனால் அவர்க்கு முன்னிருந்த பிங்கல முனிவருடைய காலத்தில் வழங்கி வந்த தமிழ் இராகங்களுக்கும் இவர் கூறும் இராகங்களுக்கும் பெயர்களில் மிகுந்த வித்தியாசமிருப்பதாகக் காண்போம். இதனால் இவைகள், அந்நிய பாஷைகளில் தமிழ் இராகங்கள் மாற்றப்பட்டு வழங்க ஆரம்பித்த பிறகே உண்டானவையென்று தெளிவாகத் தெரிகிறது. இவர், தலைமை பற்றிய இராகங்கள் என்று சொல்வதில் மேகவிரஞ்சி, குறிஞ்சி, கைசிகம், வராளி, இந்தோளம், நாராயணி, நாட்டை, சீராகம், பங்காளம், கூர்ச்சரி, காந்தாரி, கௌளி, வேளாவளி, பைரவி, தன்னியாசி என்னும் இராகங்கள் பூர்வம் தமிழ் மக்கள் வழங்கி வந்த இராகங்களேயென்று அறிவோம். பூர்வ தமிழ் மக்கள் முதல் ஊழியில் வழங்கி வந்த 12,000 ஆதி இசைகளையும் அவைகளின் சுரக்கிரமத்தையும் பாடும் கிரமத்தையும் சொல்லும் நூல்கள் அழிந்து போனதினிமித்தம் அந்நிய பாஷைக்காரர் சொல்லும் இராகங்களைக் கலந்து அகத்தியர் நூலைச் சுருக்கிச் சொல்லுகிறேன் என்று சொல்லுகிறார். இப்படிச் சொல்வதினால் அகத்தியர் காலத்தில் இவர் சொல்லும் இராகங்கள் இருந்தனவென்று நினைக்கக்கூடாது. இவருடைய இராக அட்டவணையை இங்கே எழுத வேண்டியது அவசியமில்லையாயினும் அந்நிய பாஷைகளைக் கற்றுக் கொண்ட தமிழ் மக்கள் தாங்கள் பாடி வரும் இராகங்களுக்கு அந்நிய பாஷையில் பெயர் வைக்கவும் அந்நிய பாஷையில் நூல் எழுதி வைக்கவும் ஆரம்பித்தார்கள் என்று அறிவதற்காகவே எழுத வேண்டிய தவசியமாயிற்று. அதனால் இசைத் தமிழுக்குரிய யாவும் வரவர அந்நிய பாஷைகளில் வழங்கத் தலைப்பட்டன.

மூன்றாம் சங்க காலத்தை அடுத்து இருந்தவராகச் சொல்லப்படும் (1) பிங்கல முனிவர் காலத்தில் வழங்கி வந்த பூர்வ இராகங்களின் பெயர்களையும், (2) பரதர் தாம் பூர்வ காலத்து இராகங்களென்று சொல்லும் இராகங்களின் பெயர்களையும், (3) பரதர் தமது காலத்தில் வழங்கி வந்தவையென்று சொல்லும் இராகங்களின் பெயர்களையும் (4) பரதர் நூலை அனுசரித்து எழுதிய சங்கீத ரத்னாகரத்தில் வழங்கி வந்த இராகங்களின் பெயர்களையும், (5) அரபத்த நாவலர் காலத்தில் வழங்கி வந்த இராகங்களின் பெயர்களையும், (6) தற்காலத்தில் வழங்கி வரும் இராகங்களின் பெயர்களையும் நாம் கவனிப்போமானால் மிகப் பூர்வமாய் முதலூழியில் தென்னிந்திய சங்கீதமும் அதைப் பற்றிய நூல்களும் மிக விரிவாயிருந்தனவென்றும் இரண்டாம் சங்க காலத்தில் முன்னூழியைப் பார்க்கிலும் குறைந்ததென்றும், மூன்றாம் சங்க காலத்தில் உடுக்கையின் நடுப்பாகம் போல் மிகச் சிறுத்துப் போனதென்றும் கடைச் சங்க காலத்தாருக்குப் பின் பரதர் காலத்தில்