(5-ம் நூற்றாண்டில்) அந்நிய பாஷைகளில் பெயர் மாற்றப்பட்டு வழங்க ஆரம்பித்ததென்றும் சுருதிகளைப் பற்றிச் சந்தேகத்தோடு நூல்கள் எழுதப்பட்டனவென்றும் சாரங்கர் காலத்தில் (13-ம் நூற்றாண்டில்) விரிவாக நூல்கள் எழுதப்பட்டனவென்றும் இக்காலத்தில் பூர்வ தமிழ் இசைகளும் அவற்றிற்குரிய இலக்ஷணங்களும் அந்நிய பாஷைகளிலேயே எழுதப்பட்டு வழங்கி வருகின்றனவென்றும் நாம் சொல்லப் பல ஏதுக்களிருக்கின்றன. கடைச்சங்க காலத்திற்குப் பின் சுருதியைப் பற்றிய நிச்சயமான ஞானமில்லாமையால் அவை மறைந்து போயினவென்றும் தெளிவாகக் காண்கிறோம். 9. அபிதான சிந்தாமணியில் காணப்படும் இராகங்கள். தலைமைபெற்ற இராகங்கள். பக்கம் 639-640. | 1 | மேகவிரஞ்சி | 9 | படமஞ்சரி | 17 | கௌளி | 25 | தேசி | | 2 | குறிஞ்சி | 10 | நாராயணி | 18 | காந்தாரி | 26 | சாரங்கம் | | 3 | பூபாளம் | 11 | நாட்டை | 19 | காம்போதி | 27 | தோடி | | 4 | கைசிகம் | 12 | வசந்தம் | 20 | இலலிதை | 28 | இராமக்கிரியை | | 5 | வராளி | 13 | பௌளி | 21 | தேவக்கிரியை | 29 | வேளாவளி | | 6 | மலஹரி | 14 | சீராகம் | 22 | தேசாக்ஷரி | 30 | பைரவி | | 7 | பல்லதி | 15 | பங்காளம் | 23 | மாளவி | 31 | குண்டக்கிரியை | | 8 | இந்தோளம் | 16 | கூர்ச்சரி | 24 | சாவேரி | 32 | தன்னியாசி |
இவை அரபத்தநாவலருடைய அட்டவணையிலும் காணப்படுகின்றன. ஸ்திரீ புருட இராகங்கள். | புருட இராகம். | ஸ்திரீஇராகம். | புருட இராகம். | ஸ்திரீ இராகம். | | பைரவி | தேவக்கிரியை மேகவிரஞ்சி குறிஞ்சி | வசந்தம் | இராமக்கிரியை வராளி கைசிகம் | | பூபாளம் | வேளாவளி மலஹரி பௌளி | மாளவி | குண்டக்கிரியை நாராயணி கூர்ச்சரி | | சீராகம் | இந்தோளம் பல்லதி சாவேரி | பங்காளம் | தன்னியாசி காம்போதி கௌளி | | படமஞ்சரி. | தேசி இலலிதை தோடி | நாட்டை. | தேசாக்ஷரி காந்தாரம் சாரங்கம் |
| துக்கவிராகம். | 1. | ஆகிரி | 3. | நீலாம்பரி | 5. | புன்னாகவராளி | | | 2. | கண்டாரவம் | 4. | பியாகடை. | 6. | வராளி |
| மகிழ்ச்சி இராகம். | 1. | காம்போதி | 2. | தன்னியாசி | 3. | சாவேரி |
|