| வசந்தகால இராகம். | 1. | காம்போதி | 2. | அசாவேரி | 3. | தன்னியாசி |
| மாலை இராகம். | 1. | கல்யாணி | 3. | கன்னடம் | | | | | 2. | காபி | 4. | காம்போதி | | |
| விடியற்கால இராகம். | 1. | இந்தோளம் | 3. | தேசாக்ஷரி | 5. | பூபாளம். | | | 2. | இராமகலி | 4. | நாட்டை | | |
| உச்சி இராகம். | 1. | சாரங்கம் | 2. | தேசாக்ஷரி | | |
அன்றியும் ஆகிரி, இந்தோளம், இராமகலி, சாரங்கம், பூபாளம் நீக்கி நின்ற மற்றவையெக்காலத்திற்கும் பொதுமைய. இனிப்பாப் பற்றிய இராகங்களாவன :- | வெண்பாவிற்கு-சங்கராபரணம், | விருத்தத்திற்கு-கலியாணி, காம்போதி, மத்தியமாவதி | | அகவற்கு-தோடி, | உலாவிற்கு-சௌராஷ்டிரம், | | கலிப்பாவுக்கு-பந்துவராளி, | தேவாரத்திற்கு-பூபாளம், | | கலித்துறைக்கு-பைரவி, | பிள்ளைக்கவிக்கு-கேதாரகௌளம், | | தாழிசைக்கு-தோடி, | பரணிக்கு-கண்டாரவம் தக்கவையென்பர் |
மேற்கண்ட இராகங்களை நாம் கவனிப்போமானால் பேர்கள் அந்நிய பாஷையில் மாற்றப்பட்டு அவையே தற்கால வழக்கத்திற்கு வந்துவிட்டனவென்றும் அந்நிய பாஷையில் பெயர் கொடுக்கப்பட்டுத் தற்கால வழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனவென்றும் தோன்றுகிறது. தற்காலத்தில் தாய் இராகங்கள் 72 என்றும், அவற்றின் ஜன்னிய இராகங்கள் இன்னின்னவையென்றும் ஆரோகண அவரோகண சுரங்களுடன் 1008 இராகங்கள் வழக்கத்திலிருக்கின்றன. அம்முறையே 1706 இராகங்கள் என்று வேறொரு அட்டவணையும் இருக்கிறது. இது தவிர பிர்ம மேளம், விஷ்ணுமேளம், ருத்ரமேளம் என்று தாய் இராகங்கள் 4624 ம், 200 ம், 72 ம் இருக்கிறதாக ஒரு தெலுங்கு நூலில் காணப்படுகிறது. ஆனால் எழுதியவர் திருநெல்வேலியில் இசைத் தமிழில் தேர்ந்த பரம்பரையிலுள்ளவர் என்று தோன்றுகிறது. இவர் எழுதிய விதிப்படி பிர்ம மேளத்திற்கு 4624 தாய் இராகங்களென்று தெரிகிறது. அதில் தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதிமால் புத்தக சாலையில் சுமார் 1000 தாய் இராகங்களுக்கு லட்சண சூத்திரமும் பெயரும் தெலுங்கில் சொல்லப்படுகிறது. இவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். வேளாள குலத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகிறது. ஆனால் இவர் எழுதி வைத்த நூலோ தெலுங்கில் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றின் எல்லா விபரமும் இராகங்களைப் பற்றிச் சொல்லும் இரண்டாம் புத்தகத்தில் காணலாம். இவைகள் யாவற்றையும் நாம் கவனிக்கையில் தமிழ் மக்கள் மிகப் பூர்வமாக இசைத் தமிழில் (சங்கீதத்தில்) தேர்ந்திருந்தார்களென்றும் தெய்வ சமுகத்திலும் ராஜ சபையிலும் பல வகையான கூத்துக்களிலும் ஒன்பது சுவையும் உண்டாகும்படி காலங்களுக்கும் பருவங்களுக்கும் சமயங்களுக்கும் நிலங்களுக்கும் ஏற்ற விதமான வெவ்வேறு கருவிகளுடன் வெவ்வேறு பண்கள் பாடி வந்திருக்கிறார்களென்றும் காண்கிறோம். இயற்றமிழில் சிறந்ததான பாவினங்கள் யாவும் சீர், அடி, எதுகை, மோனை என்ற முக்கிய அம்சங்களுடனும் மாத்திரைக் கணக்குடனும் அமைந்திருப்பதை நாம் கவனிப்போமானால் வெவ்வேறு விதமான தாளங்களுடனும்
|