பக்கம் எண் :

646
பரிபாடலில் காணப்படும் இராகங்கள்.

வெவ்வேறு விதமான பண்களுடனும் தொன்று தொட்டுப் பாடப்பட்டு வந்திருக்கிறதென்று நாம் காணலாம். தற்காலத்தில் சாதாரணமாக நாம் பார்க்கும் அகவற் பாக்களுங்கூட பண்ணோடு பாடப்பட்டுவந்தன என்று அடியில் வரும் அகவல்களால் தெரிகிறது. இவ்வகவல்கள் இளங்கோவடிகளுக்கு வெகுகாலத்திற்கு முன்னதாக மூன்றாவது சங்க காலத்தில் வழங்கி வந்த 70 பரிபாடல்களிலுள்ளவை. கிறிஸ்துவுக்கு முன்னுள்ள கடைச் சங்க காலத்தில் வழங்கி வந்த இப்பரி பாடல்களைப் போலவே முதற் சங்கமிருந்த தென் மதுரையிலும் எண்ணிறந்த பரிபாடல்களிருந்ததாக நக்கீரரால் இறையனார் அகப்பொருள் பாயிரத்திற் சொல்லப்படுகிறது. இதைக் கொண்டு முதல் ஊழிக்கு முன்னுள்ள முதற் சங்கமிருந்த காலத்திலும் அடியில் வரும் பாரிபாடலைப் போலவே எண்ணிறந்த பாடல்கள் பாடப்பட்டன என்றும் அவைகள் வெவ்வேறு விதமான இராகங்களால் பாடப்பட்டனவென்றும் நாம் நினைக்க வேண்டும்.

10. பரிபாடலில் காணப்படும் இராகங்கள்.

எட்டுத்தொகையுள் ஐந்தாவது தொகையாகிய பரிபாடல்.
ஐந்திரு ளறநீக்கி நான்கினுட் டுடைத்துத்தம்
மொன்றாற்றுப் படுத்தநின் னார்வலர் தொழுதேத்தி
நின்புகழ் விரிந்தன கிளக்குங்கா லவைநினக்
கிறும்பூ தன்மைநற் கறிந்தோ மாயினு
நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்பத்
திருமணி திரைபா டவிந்த முந்நீர்
வருமழை யிருஞ்சூன் மூன்றும் புரையு
மாஅ மெய்யோடு முரணிய வுடுக்கையை
நோனா ருயிரொடு முரணிய நேமியை
செய்தீர் செங்கட் செல்வநின் புகழ
புகைந்த நெஞ்சிற் புலர்ந்த சாந்திற்
பிருங்கலா தன்பிணி பலப்பட வலந்துழி
மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்
தலர்ந்த புகழோன் றாதை யாகலி
னிகழ்வோ னிகழா நெஞ்சின னாகநீ
யிகழாநன்றா நட்டவன் மார்பு முயங்கி
யொன்றா நட்டவ னுறுவரை மார்பிற்
பிடிமதஞ் சாம்ப வொதுங்கி
யின்ன லின்னரோ டிடிமுர சியம்ப
வெடிபட வொடிதூண் டடியொடு தடிதடி
பலபட வகிர வாய்த்த வுகிரினை
பூருவத் துக்கரு வலகந் தரத்தாற்
றாங்கியிவ் வுலகந் தந்தடிப் படுத்ததை
நடுவ ணோங்கிய பலர்புகழ் குன்றினோடொக்கு
நின் வெம்மையும் விளக்குமு ஞாயிற்றுள
நின் றண்மையுஞ் சாயலுந் திங்களுள