பக்கம் எண் :

647
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

நின் சுரத்தலும் வண்மையு மாரியுள
நின் புரத்தலு நோன்மையு ஞாலத்துள
நின் னாற்றமும் வண்ணமும் பூவையுள
நின் றோற்றமு மகலமு நீரினுள
நின் னுருவமு மொலியுமா காயத்துள
நின் வருதலு மொடுக்கமு மருத்தினுள
அதனால், இவ்வு முவ்வு மவ்வும் பிறவு
மேம மார்ந்தநிற் பிரிந்துமேவல் சான்றன
வெல்லாஞ் சேவலோங் குயர்கொடி யோயே
சேவலோங் குயர்கொடி நின்னொன் றுயர்கொடிபனை
நின்னொன் றுயர்கொடி நாஞ்சில்
நின்னொன் றுயர்கொடி யானை
நின்னொன் றுயர்கொடி யொன்றின்று
விடமுடை யரவினுட லுயிருண் குவணம்
அவன்மடி மேல வலந்தது பாம்பு
பாம்புதொடி பாம்பு முடிமேலன பாம்பு
பூண்பாம்பு தலைமேலது பாம்பு சிறைதலையன
பாம்பு படிமதஞ் சாய்த்தோய் பசும்பூணவை
கொடிமே லிருந்தவன் றாக்கிரையது பாம்பு
கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலுங்
கொடுமையுஞ் செம்மையும் வெம்மையுந் தண்மையு
முளவழி யுடையை யில்வழி யிலேயே
போற்றா ருயிரினும் பொற்றுந ருயிரினு
மாற்றே மாற்ற லிலையே நினக்கு
மாற்றா ருமிலர் கேளிரு மிலரெனும்
வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே
மனக்கோ ணினக்கென வடிவுவே றிலையே
கோளிரு ளிருக்கை யாய்மணி மேனியை
நக்கலர் துழாஅய் நாறிணர்க் கண்ணியை
பொன்னிற் றோன்றிய புனைமறு மார்ப
நின்னிற் றோன்றிய நிரையிதழ்த் தாமரை
யன்ன நாட்டத் தளப்பரி யாயவை
நின்னிற் சிறந்த நிறைகட வுளவை
அன்னோ ரன்ன வேறு முளவவை
நின்னோ ரன்னோ ருணரு மருமறை
அழல்புரை குழைநிழற் பகரும் பலசினை
யாலமுங் கடம்புநல் யாற்று நடுவுங்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவு
மவ்வவை மெய்வேறு வேறு பெயரோ
டெவ்வயி னோயு நீயேநின் னார்வலர்
தொழுதகை யமைதியி னமர்ந்தோயு நீயே