ஆக ஒருவன் பேருக்கு காலேமகாணி காணி அரைக்காணி கீழ் அரையேயரைக்கால் முக்காணி முந்திரி இம்மி ஏழு என்று ஓலையிலாவது கடிதத்திலாவது தரையிலாவது எழுதாமல் மனக்கணக்காகவே பார்த்துப் பதில் சொல்லும் வழக்கம் நாளது வரையும் இருந்து வருகிறதே. இதுபோல் 3, 5, 7, 11, 13, 17 போன்ற இலக்கங்களும் அவற்றின் பெருக்குத் தொகைகளும் பிரிக்கப் படுவதற்காக இதிலும் நுட்பமான வாய்ப்பாடுகளை வழங்கி வந்தார்கள். 1/2,3238245,3022720,0000000 | தேர்த்துகள் | ... | 61/2 கொண்டது | நுண்மணல் | ...ஒன்று | 1/3575114,6618880,0000000 | நுண்மணல் | ... | 100 கொண்டது | வெள்ளம்... | ...ஒன்று | 1/35751,1466188,8000000 | வெள்ளம் | ... | 60 கொண்டது | குரல்வளைப்பிடி | ...ஒன்று | 1/595,8524436,4800000 | குரல்வளைப்பிடி | ... | 40 கொண்டது | கதிர்முனை | ...ஒன்று | 1/14,8963110,9120000 | கதிர்முனை | ... | 20 கொண்டது | சிந்தை | ...ஒன்று | 1/7448155,5456000 | சிந்தை | ... | 14 கொண்டது | நாகவிந்தம் | ...ஒன்று | 1/532011,1104000 | நாகவிந்தம் | ... | 17 கொண்டது | விந்தம் | ...ஒன்று | 1/31294,7712000 | விந்தம் | ... | 7 கொண்டது | பாகம் | ...ஒன்று | 1/4470,6816000 | பாகம் | ... | 6 கொண்டது | பந்தம் | ...ஒன்று | 1/745,1136000 | பந்தம் | ... | 5 கொண்டது | குணம் | ...ஒன்று | 1/149,0227200 | குணம் | ... | 9 கொண்டது | அணு | ...ஒன்று | 1/16,5580800 | அணு | ... | 7 கொண்டது | மும்மி | ...ஒன்று | 1/2,3654400 | மும்மி | ... | 11 கொண்டது | இம்மி | ...ஒன்று | 1/2150400 | இம்மி | ... | 21 கொண்டது | கீழ்முந்திரி | ...ஒன்று | 1/102400 | கீழ்முந்திரி | ... | 320 கொண்டது | மேல்முந்திரி | ...ஒன்று | 1/320 | மேல்முந்திரி | ... | 320 கொண்டது | ...ஒன்று | |
மேற்கண்ட கணித நுட்பங்கள் நவரத்தினங்களின் கொள்வனை கொடுப்பனைகளிலும் நில அளவுகளிலும் வான சாஸ்திர கணிதத்திலும் உபயோகப்பட்டு வந்ததென்று நாம் நிச்சயமாய்ச் சொல்லலாம். தமிழ் மக்கள் வழங்கி வந்த பூர்வ கணித முறைகள் தற்காலத்தில் அதிகமாய் வழக்கத்திலில்லை யானாலும் முற்றிலும் உபயோகத்தில் இல்லையென்று சொல்வதற்கிடமில்லை. நாம் சுத்த கர்நாடகம் என்று ஏளனம் செய்யும் கிராமாந்தர வாசிகளில் அநேகர் பூர்வ கணித முறைகள் தெரிந்தவர்களாகவே யிருக்கிறார்கள். சம்பளப்பட்டி, கூலிக்கணக்கு, மரகனக்கணக்கு, நிலச்சதுரக் கணக்கு, நிறைக்கணக்கு, நாள் நக்ஷத்திரக்கணக்குகள், கிரக நிலைக்கணக்கு, திசாபுத்திக் கணக்கு முதலிய பல கணக்குகள் புத்தக ரூபமாகச் சட்டைப் பையிலிருந்து வழங்கும் இக்காலத்தில் பூர்வ நுட்பமான தமிழ்க் கணக்குகள் அவசியமில்லையென்று நாம் நினைப்போம். அப்புத்தகம் இல்லாமல்போனால் பெரும் விழிவிழிக்க வேண்டும். ஒரு சிறு தொகையைப் பெருக்கவும் பிரிக்கவும் முடியாமல் திண்டாடவேண்டியதாக ஏற்படுகிறது. ஆனால் தமிழ்க் கணக்குத் தெரிந்த ஒரு சிறு பையன் மனக்கணக்காய்ச் சொல்வான். மூன்று பேருக்கு ஒன்று என்பதை 1/3 என்றும் மூன்று பேருக்கு இரண்டு என்பதை 2/3 என்றும் எழுதுவோம். 2/3 என்ற கணக்கு ஒரு வீணைத்தந்தியில் பஞ்சமம் நிற்குமிடத்தைக் குறிக்கிறதாக வழங்கி வருகிறோம். மேருமுதல் பஞ்சமம் 1/3 ஆகவும் மெட்டுமுதல் 2/3 ஆகவும் சொல்லப்படுகிறது. இந்த அளவு தமிழ்க் கணிதத்தின்படி இவ்வளவென்று சொல்லலாமே யொழிய மற்ற கணக்கினால் பெயர் குறித்துச்சொல்ல முடியுமென்று நான் நினைக்கவில்லை.
|