பக்கம் எண் :

652
தமிழ்க் கலையில் சிறந்து விளங்கிய புலவர்கள்.

ஒற்றை 2150400 இம்மியாகப்பண்ணி அதில் மூன்றில் ஒன்று 716800 இம்மி என்று சொல்வார்கள். அல்லது காலேமாகாணி காணி அரைக்காணி கீழ் அரையே அரைக்கால் முக்காணி முந்திரி இம்மி ஏழு என்று பெயரோடு சொல்வார்கள். ரூபாய், அணா, பைசா என்று நாணயங்களையும், பாரம், மணங்கு, வீசை, சேர், பலம், விராகனிடை, பணவிடை என்று எடைகளையும் பற்றி நாம் தற்காலத்தில் வழங்குகிறது போலவே பூர்வம் தமிழ்மக்கள் நுட்பமாக வரும் பின்ன பாகங்களுக்கும் பெயர்வைத்து மிகச்சாதாரணமாய் வழங்கிக்கொண்டு வந்தார்கள். இம்மி என்பது ஒன்றை 2150400 பங்குகள் செய்து அதில் ஒன்றென்று நாம் அறிகிறோம். இதுபோலவே தேர்த்துகள் வரையுமுள்ள சிறு எண்களுக்கும் பெயர்கள் சொல்லி வழங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதுபோலவே வானசாஸ்திரத்தில்,

விதர்ப்பரை.....60 தர்ப்பரை
தர்ப்பரை.....60 விகலை
விகலை.....60 கலை
கலை.....60 பாகை
பாகை.....30 இராசி
இராசி.....12 மண்டலம்

என்று வழங்கும் சோதிடக் கணக்கைப் பார்ப்போமானல் அவர்களுடைய கணித நுட்பம் நன்றாய் அறிவோம். இன்று நேற்றல்ல மிகப் மிகப்பூர்வந் தொட்டு இசைத்தமிழிலும் கணிதத்திலும் இவை சம்பந்தமான மற்றும் சாத்திரங்களிலும் தமிழ்மக்கள் மிகப்பாண்டித்தியமுடைய வர்களாயிருந்தார் களென்பது தெளிவாய் அறியக்கிடக்கிறது.

13. தமிழ்க் கலையில் சிறந்து விளங்கிய புலவர்கள்.

முதல்ஊழியின்பின் ஆரியர் தென்னிந்தியாவிற்குவந்த பிறகு நால்வகைச்சாதிகளை வர்ணமென்றும் அவர்களுக்குரிய சடங்குகள் இன்னவையென்றும் வகுத்ததாக இதன் முன்பார்த்திருக்கிறோம். அதில் சூத்திரர் என்று சொல்லப்படும் வேளாளர் பூர்வகாலத்தில் பாண்டிய ராஜர்களுக்கும் சோழராஜர்களுக்கும் மந்திரிகளாகவும், சம்பிரிதிப் பிள்ளையாகவும், தானாதிபதிப்பிள்ளையாகவும், மணியகாரப்பிள்ளையாகவும், கணக்கப்பிள்ளையாகவும், கார்வாரிப்பிள்ளையாகவும், ஆலயங்களில் பூசாரிகளாகவும் இருந்ததல்லாமல் ஆசாரியர்களாகவும், தம்பிரான்களாகவும், மடாதிபதிகளாகவும், பண்டார சந்நதிகளாகவும், சமயகுருக்களாகவும், தேசிகர்களாகவும், கவிராயர்களாகவும், புலவர்களாகவும், உபாத்தியாயர்களாகவும், அண்ணாவிகளாகவும் அமர்ந்து லௌகீக வைதீக கருமங்களில் முதன்மை பெற்றிருக்கிறார்கள். இப்படி முதன்மைபெற்றுத் தமிழ்நாடு வெகுகாலம் சிறப்புற்றோங்கி விளங்கியது. கடைச்சங்ககாலத்தில் பாண்டிய ராஜ்யத்தில் ஆரியர்கள் முதன்மை பெறவும் அதனால் வேளாளர் ஒதுங்கவும் அதுகாரணத்தால் பாண்டிய ராஜ்யம் வரவர அழிந்து போகவும் நேரிட்டது. இப்படி வரும் என்று தெரிந்த ஒளவையார் "நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம், கோலெனிலோ வாங்கே குடிசாயும், நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத்துணையாவான், அந்த அரசே அரசு" என்று சொல்வதை நாம் கவனிப்போமானால் அரசர்கள் இவ்விதமாக இராஜகாரியம் நடத்தவேண்டுமென்று இதோபதேசம்சொன்னதாகத் தெரிகிறது. ஆனால் அம்முதுமொழியைக் கவனியாது குறைவு பட்டார்கள். சங்கமும் கலைந்தது, இராஜ்ய உரிமையையும் படிப்படியாய் இழந்தார்கள். தம் அரசனை உயிர்க்குயிராகக்காப்பாற்றும் இயல்பில் சிறந்தவர்களாயிருந்த வேளாளர் உதவி நீங்கினபின் பாண்டிய வம்சத்தோர் மிக ஏழைகளாகி அவர்களால் தூஷிக்கப்படக் கூடியவர்களாகவும் ஆனார்கள். இதுகால