பக்கம் எண் :

653
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

இயற்கைதானே. "குளம் வற்றினாலும் குத்துக்கல்லுக்கு மயக்கமில்லை" என்ற பழமொழிப்படி பாண்டிய ராஜ்யம் போனாலும் அதில் பிரதானிகளாய் விளங்கியவேளாளர் நாளதுவரையும் பல பூர்வகலைகளிலும் சிரோ ரத்தினங்கள் போல்விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இற்றைக்குச் சுமார் 30 வருஷத்திற்கு முன்னிருந்த மகா---ஸ்ரீ மீனாக்ஷிசுந்திரம் பிள்ளை அவர்களைத் தமிழ்மக்கள் யாவரும் அறிவார்கள். மகா---ஸ்ரீ தியாகராஜ செட்டியார் அவர்கள், சோடசா வதானம் மகா---ஸ்ரீ சுப்பராயச் செட்டியார் அவர்கள், மகா---ஸ்ரீ சாமிநாதக்கவிராயர் அவர்கள், முன்சீப் மகா---ஸ்ரீ வேதநாயகம் பிள்ளை அவர்கள், வரகனேரி மகா---ஸ்ரீ சவுரிமுத்தாப்பிள்ளை அவர்கள், திரிசிரபுரம் மகா---ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை அவர்கள், இலக்கியம் மகா---ஸ்ரீ பெரியண்ண பிள்ளை அவர்கள், திருவையாறு மகா---ஸ்ரீ கந்தசாமிபிள்ளை அவர்கள், மகா---ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள், மகாமகோபாத்தியாயர் மகா---ஸ்ரீ வே, சாமிநாதையர் அவர்கள் முதலிய கனவான்கள் இவரிடத்தில் மாணாக்கராயிருந்து தமிழ்க் கற்றுக்கொண்டார்கள். இன்னும் இம்மகானைப்போல் தமிழில் வல்லபமுள்ள கருங்குழி மகா---ஸ்ரீ இராமலிங்கம் பிள்ளை அவர்களும், மகா---ஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களும், மகா---ஸ்ரீ சரவணப் பெருமாள் ஐயர் அவர்களும், மகா---ஸ்ரீ விசாகப் பெருமாள் ஐயர் அவர்களும் இவர்கள் காலத்திலிருந்தார்கள். மகா---ஸ்ரீ நெல்லையப்பக் கவிராயர் அவர்கள், மகா---ஸ்ரீ திரிகூடராசப்பக் கவிராயர் அவர்கள், மகா---ஸ்ரீ அருணாசலக்கவிராயர் அவர்கள், மகா---ஸ்ரீ கந்தசாமிக்கவிராயர் அவர்கள், சோழவந்தான் மகா---ஸ்ரீ அரசன் சண்முகம்பிள்ளை அவர்கள், மகா---ஸ்ரீ இராகவையங்கார் அவர்கள், பண்டாரசந்நதி மகா---ஸ்ரீ அம்பலவாணதேசிகர் அவர்கள், மகா---ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் அவர்கள், போன்ற வித்துவ சிரோமணிகளின் கல்விப் பெருமையைக் கேள்விப்படுகின்றோம். இவர்களுக்கு முன்னிருந்த ஒளவை, கபிலர், திருவள்ளுவர், வரகுணபாண்டியன், அதிவீர ராமபாண்டியன், குலசேகரபாண்டியன், பிள்ளைப்பாண்டியன், புகழேந்தி, கம்பர், அம்பிகாபதி, பெருந்தேவனார், தாயுமான சுவாமிகள், கச்சியப்ப சிவாச்சாரியார், நம்மாழ்வார், ஞானசம்பந்தசுவாமிகள், சுந்தர மூர்த்தி சுவாமிகள், அப்பர், மாணிக்கவாசகர், குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப்பிளையார், அருணகிரிநாதர், சேக்கிழார், குரமகுருபரசுவாமிகள், சாமினாத தேசிகர், சிவஞானமுனிவர், கச்சியப்ப முனிவர், சிவப்பிரகாச சுவாமிகள், வீரமாமுனிவர் முதலியபெரியோர்களைத் தமிழ்மக்கள் யாவரும் அறிவார்கள். பூர்வகாலந்தொட்டு மூன்றுசங்கங்களிலும் தற்காலத்திலும் தமிழை ஆராய்ந்து தமிழை வளர்த்தவர்கள் பலராயிருந்தாலும் அதில் மிச்சமானவர்கள் வேளாளர் என்றே சொல்ல ஏதுவிருக்கிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார் பொருளதிகாரம் 75 வது சூத்திர உரையில்,

"இவற்றுள் தர்க்கமும் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம்" என்றும்

மற்றும் பொருளதிகார வுரையில் பல இடங்களில் இசைத்தமிழும் நாடகத்தமிழும் வேளாளர்களுக் குரியவையென்றும் சொல்லுகிறார். புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியத்திற்கு உரை எழுதிய பெருந்தேவனார் பொருட்படலம் 19 வது பாட்டின் உரையில்,

"கொடுத்தல், உழுதல், பசுக்காத்தல், வாணிபம் சிறப்பித்தல், நரம்புக்கருவி முதலாய கருவிகற்றல், அந்தணர் வழி யொழுகல் என்னும் வேளாளர் அறுதொழிலுமாம்" என்று சொல்லுகிறார். இவைகளைக் கொண்டும் தற்கால வித்துவ சிரோமணிகளில் பலர் தமிழ் இலக்கிய இலக்க