ணத்திலும் சோதிடத்திலும் வேதாந்தத்திலும் சங்கீதத்திலும் தேர்ச்சி யுடையவர்களா யிருப்பதைக்கொண்டும் இயல் இசைநாடகமென்றும் முத்தமிழிலும் பூர்வந்தொட்டு அதாவது லெமூரியாவில் தென்மதுரையிலுள்ள முதற் சங்ககால முதற் கொண்டு தற்காலம்வரையும் தமிழர்கள் தேர்ந்தவர்களாயிருந்தார்களென்று தெளிவாய்த் தெரிகிறது. மற்றவர்களிடத்தில் இரவல் வாங்கும் வழக்கமும் பிறர் பொருளைத் தன்ன தென்றுசொல்லும் வழக்கமும் தமிழர்களிடத்திருந்ததில்லை என்று நாம் நம்பலாம். இப்படிப் பூர்வந்தொட்டுக் கல்வியில் தேர்ந்தவர்களான தமிழ் மக்கள் வரவர கலைகளின் நுட்பமும் பெருக்கமும் இழந்து குறைந்தார்களென்று மிகவிசனத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது. பூர்வநூல்கள் சிலமறைப்பை யுடையவைகளாய் இருந்ததோடு அவைகளின் விரிவானபாகமும் குறுகிப்போனதினால் எல்லோருக்கும் தெரிவது கூடியதல்ல. இப்படிப்பட்ட மறைப்பு சங்கீத சாஸ்திரத்திலும் இருந்திருக்கவேண்டு மென்பது நிச்சயம். மற்றப்படி அலகு முறைக் கணக்கில் இவ்வளவு பேதம்வரமாட்டாது. கொலம்பஸ் நிறுத்திய முட்டையைப்போல் எல்லாரும் அவமதிக்காதபடி இப்படிச்செய்தார்கள்போலும். 14. முடிவாக இசைத்தமிழில் வழங்கிவந்த சில மறைப்பால் சுருதியைப் பற்றிச் சந்தேகிக்க நேரிட்டதென்பது. கனவான்களே! தென்னிந்தியாவில் பண்டையோர் வழங்கி வந்த ஆயப்பாலையையும் அதன் பதினான்கு கோவைகளையும், வட்டப்பாலையையும் அதில் வரும் பன்னிரு பண்களையும், பன்னிரு பண்களில் தோன்றும் ஏழேழு பாலைகளையும் நான்கு யாழ்களையும் அவைகளின் ஜாதிகளையும், அவைகளிலுண்டாகும் நூற்று மூன்று பண்களையும் பன்னீராயிரம், இராகங்களையும், ஏராளமான யாழ்களின் வகைகளையும் இராகம் பாடும் விதத்தையும் தாளங்களின் விஸ்தாரத்தையும் அபிநயத்தின் நுட்பத்தையும் பல வகை கொட்டுங்கருவிகளையும் அவைகள் உபயோகிக்கப்பட்டுவந்த விதத்தையும் நாம் பார்க்கும்போது தென்னிந்தியாவின் சங்கீதத்தினுயர்வை என்னவென்று சொல்வது. இயல் இசை நாடகம்என்னும் முத்தமிழின் பெருமையைப் பற்றியும் பூர்வத்தைப் பற்றியும் எவர் சொல்ல வல்லவர்? தென்னிந்தியாவிற்கு அப்புறத்திருந்தவர் கீழ்த்திசையிலிருந்தே சங்கீதம் வந்ததென்று சொல்வது தமிழ் நாட்டைத்தானோ? கர்நாடக சங்கீதம் மிகவும் சாஸ்திரமுறைமையுடைய தென்றும் மற்றக் கீதங்கள் யாவற்றிலும் புகழ்ந்து சொல்லக் கூடியதென்றும் பன் முறை கொண்டாடுவது தென்னிந்திய சங்கீதத்தைத்தானோ? வேதங்கள் ஓதுவதற்கும் இராகங்களைத் தனித்தனி அழகாய்ப் பாடுவதற்கும் ஏதுவாயிருப்பது ஆயப்பாலையிலும் வட்டப்பாலையிலும் வழங்கும் சுரங்களைத்தானோ? தாரத்து உழை தோன்றும் உழையுள் குரல் தோன்றும் குரலுள் இளி தோன்றும் இளியுள் துத்தந்தோன்றும் துத்தத்துள் விளரி தோன்றும் விளரியுள் கைக்கிளை தோன்றும் என்று ச-ப, ச-ம முறையாய் நம்முன்னோர்கள் வழங்கி வந்தசுரங்களைத்தானோ இப்போது மற்றவர்கள் வழங்கி வருகிறார்கள்? இந்தச் சுரங்கள் தானோ தென்னிந்திய சங்கீதத்திலும் வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வழங்கி வருகின்றன? இதுதானோ சந்தேகத்திற்கு இடமாகி இருபத்திரண்டு என்று திண்டாடுகிறது? இந்தச் சுரங்கள் தானோ தென்னிந்திய சங்கீதத்திலும் வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வழங்கி வருகின்றன? இதுதானோ சந்தேகத்திகு இடமாகி இருபத்திரண்டு என்று திண்டாடுகிறது? என்ன அநியாயம்? இந்தியாவில் சிறப்புற்றோங்கிய தென்மதுரையழிந்த பின் அதில் வழங்கிய சங்கீதத்திற்கும் இக்கதியாயிற்றே! எடுத்து நிறுத்த வந்தவர்கள் உள்ளதையுங் கெடுத்தார்களே! இனந்தெரியாத மற்றவருக்குத் தெரிந்தோர் எடுத்துச் சொல்லாமற் போனார்கள். எல்லாருக்கும் இரவல் கொடுத்து மினந்தெரியாமற் போனதேயென்று வருத்தப்பட வேண்டியதாயிருக்கிறது.
|