இவைபோன்ற ஏாழவதேழாவது இராசியில் வரும் சுரங்கள் இணைச்சுரங்களாம். தொட்ட இராசியிலிருந்து அதாவது இடபத்திலிருந்து குரல் ஆரம்பித்தால் அதற்கு ஏழாவது இராசியாகிய தனுசில் இளி நிற்கிறது. இது ஆரோகணமாம். 
அப்படியே தனுராசியின் இளியிலிருந்து அவரோகணமாய் ஏழாவது இராசியில் அதாவது இடபத்தில் குரல் நிற்கிறது. இதையே "இணையெனப் படுவ கீழும் மேலும், அணையத் தோன்றும் அளவின" என்றார். ஆரோகண முறையாலும் அவரோகண முறையாலும் ஏழாவதேழாவது இராசியில் வரும் சுரங்கள் இணைச்சுரங்களாம். இதுவே ஆரோகண கதியாய் ச-பவும் அவரோகண கதியாய் ச-மவும் என்று அறிய வேண்டும். இதையே "இணை நரம்புடையன" என்றும் "இணை நரம்பு
|