பக்கம் எண் :

79

அரிகேசநல்லூர் மகா---ஸ்ரீ லி. முத்தையா பாகவதரவர்கள் இயற்றியது

நிலமண்டில ஆசிரியப்பா.

5.

பானில விரிந்த மானில மென்னும்
கன்னி வதனமாங் கன்னி நாட்டில்
ஆம்பலம் பொய்கைசூழ் சாம்பவ னோடையில்
சான்றார் பலர்புகழ் சான்றார் மரபிற்
கன்னி மரியாள் தன்னிகர் காதலன் 

10 


பொற்பதம் போற்று மற்புத னொழுக்கிற்
புவிசே ரப்புகழ் சுவிசேட முத்தனார்
நன்னய மகாரின் முன்னவ னாவோன்
அன்பும் அருளும் இன்புயர் சீலமும்

கல்வியும் அறிவும் சொல்வினை யாற்றலும் 

15


ஈகையும் நீதியும் வாகையும் ஊகையும்
கலந்தொரு வடிவம் நிலந்தனி லெடுத்தெனக்
கருதுங் கனவா னிருநிதி வளத்தோன்
கிளைபல சூழ்தர விளைநிலங் கனிமரப்
பொழிலொடு தஞ்சையில் எழில்பெற வுறைவோன் 

20 


நிதமகிழ்ந் தேசுவின் பதமலர் பரவும
பத்தனா யினுமோர் சித்தனார் அருளினால்
மாயிரு ஞாலத்தோர் ஆயுர் வேதியர்
உச்சிமேற் றாங்கினர் மெச்சு மருத்துவன்

கற்றவ ரெவர்க்குஞ் சுற்ற மாவோன் 

25 


நிறைபெறு கலைபல முறைபெறத் தெளிந்தோன்
ஓங்கிய புகழ்சேர் ஆங்கில மன்னவர்
கோவருள் செய்த ராவு சாயபுப்
பட்ட மணிந்திவ் வட்டவா ருலகில்

மாப்பிர சத்திகூர் ஆப்பிர காமெனும் 

30


பண்டிதன் பண்டைத் தண்டமி ழிசைநூல்
பற்பல ஆய்ந்ததின் நற்பல னாகச்
செந்தமி ழிசையே முந்திய தென்றும்
நால்வகைப் பாலையின் மேல்வகை விரிப்ப
வரன்முறை ஏற்ப சுரநிலை மற்ற 


இன்னும் இசைபல மன்னு மென்றும்
நாட்டிய தன்றிக் கூட்டிய உதாரணம்
பாருந்திய பற்பல கிருதிக ளியற்றியும்
சுரநிலை வெவ்வேறு கருதிய மதத்தினைச்