| 1 | இறைவனரு ளிலங்கவெமை யாண்டருளு மம்மையப்ப னியல்வ லத்தால்மறையுணர்ந்த மோனர்திற லிலங்குமர ணகழிமதில் வளஞ்சேர் தஞ்சை கறைதபுநற் பதியில்தமிழ் செழித்தோங்கப் பொதிகைமுனி கவின்கொண்டாருந் திறைகொள்மன னாபிரகாஞ் சௌமியன்சீ ரறிந்தபடி சிறிது சொல்வாம். |
| 2 | மின்பூத்த மகரந்தம் புதுநறவத் துண்சோலை வெகுவா யோங்கிக் கொன்பூத்த வமுதமெனப் புடைபரந்த பொன்னிநதி குலவு கங்கிற் பொன்பூத்த சென்னல்விளை மருதநிலம் பொலிந்திலகு சோழ நாட்டிற் றென்பூத்த வரசர்களாற் செழித்தாண்ட தஞ்சைநகர் சிறக்குஞ் ஸ்ரீமான். |
| 3 | பூமாது மலர்மாது புகழ்மாது பொலிந்திலகு பொற்பின் மிக்கான் நாமாது நேமாது நகைமுகத்துஞ் சொல்லிடத்தும் நகாரி யானோன் தூமாது விளங்குமனத் தூய்மையொடு வாய்மையுளந் துளங்குஞ் சீர்த்தி தேமாது காவல்புரிந் தெழின்மாது விளங்குசெம் பியனா மன்னோ. |
| 4. | ஆங்காங்கு மாடநிறை மாளிகையின் றொகையு மமைப்பமைப்பா முறவினர்க ளமையில்லத் தொகையும் நூங்குபெருஞ் சாலைசுற்றில் நுட்பமொடு சுழலும் நூதனமார் சலயந்தி ரங்கண்மாரு தத்தால் பாங்குபெற வியங்கழகும் பலமருதக் கங்கிற் பைங்கரும்பு வாழைசுவை யொட்டுமாங் கனிகள் ஓங்குதெங்கு வகைகளுட னுயர்மருதங் களிலே யுயர்சாலிப் பெருங்குவிய லுனதவரை யாமால். |