பக்கம் எண் :

81

5. 

வானுலக கண்காட்சி யிந்திரன்போல் வாழும்
   வளங்குலவு மாளிகையில் மஞ்ஞைகளித் தகவும்
மீனுலவு சுனைகளிலே மிஞிறுகளித் தோட
   விளையாடிப் பசும்புல்லின் மீதுதுள்ளுங் காலி
ஆனுலவுங் கன்றுடனே யந்தியெல்வை யினிலே
   யழகாகச் சேர்ந்தொழுகு மடுக்கணி செவ்வியினைக்
கோனுலவுஞ் சேடனது குலிசநா விருந்தாற்
   குறித்துரைக்க லாகுமெனுங் கொள்கையில்நா ணினனே.
 

6. 

வரகுபாண் டியன்றொடர்பி லபிராம பாண்டியன்
   வழிவந்த வேனாதி நாயனார் மரபிற்
சிகரமுள வழுதிமுத்துச் சாமியன்னம் மாள்செய்
   திவ்யதவங் கலிநான்கொன் பஃதறுப திரண்டில்
விரகமறு தெய்வரவுத் திரியுத்தி ராடம்
   வியன்சோம பூர்வபக்க மீரொன்பான் நாளிற்
கிரகவமைப் பதிலாசா னுச்ச யோகங்
   கிளர்ச்சிமங் களமதனிற் *கெழுமியுதித் தன்னே
 

7. 

அரசியலா ரரிவைமுகுர்த் தஞ்சிலையி லாரல்
   அமைச்சியா மகரத்தி லிராகுகட கத்திற்
பரசுகுரு புதன்கேது ரவிசுங்க னரியிற்
   பதிந்தசநி யிராசியமைப் பதைப்பதிந்து பார்க்கிற்
சரசகுண சம்பன்னன் றவயோகி சீலன்
   சாசுவத யோகவான் றயைமிகுகண் ணியன்றேர்
முரசமொடு யாழ்கீத வகைமுழங்குங் திவ்விய
   முன்றிலான் றன்வந்திரி முதல்வள்ள லாமால்.
 

8. 

தெய்வமுறைப் பண்கடெரி மாவரசன் பாலிற்
   றிகழ்ராணி ரைபதூர்மா தவராவ்தி வானுங்
கைவந்த கனியெனநா டகவிசையிற் றேர்ந்தே
   கண்டசதி வரிசைசுதி முறைபிசகா நெறியில்
மெய்வந்த பல்லவிகள் வியன்பாடல் பத்தி
   மிகுகீர்த்த னைவிசிதங் கேட்டுமகிழ் வுற்றார்
பொய்வந்த புலவர்புறப் போக்கிலொளித் தேங்கப்
   புகழ்மங்க ளம்வாழ்த்துப் புலமைமுழங் கினவே.
 


9. 

பந்தனஞ்செய் யாகங்கள் பலவிரத மாற்றும் பக்குவத்திற் கேற்றபல சனனங்கள்
                                                     தொடர்பால்
இந்தனஞ்சேர் தவந்தேருங் கருணா னந்த விருடிதவ ராஜயோ கியர்பாலி
                                                       லிழுத்துச்
சந்தமா ருதம்வீசுஞ் சுருளிமலைச் செல்லுஞ் சமயத்திற் சார்ந்தார்யா
                                              வருந்தனித்து மயங்க
வந்தனைசெய் முறைமையொடு மாதவர்க ளுடனே மகிமையணி மகிழ்வாக
                                               வனசுரத்தே கினரே.
 

10. 

ஏகியவத் தவத்தர்பா லிளகுமன துடனே யீறிலான் போலொளிரு மிருடியர்பால்
                                                         விடுக்க
யோகியவ் விராசமுனி யுவந்திவனை நோக்கி யுண்மைநெறி தவறிடா
                                           துயர்நிலையைக் கண்டுஞ்
சேகரஞ்சேர் குலமுறையிற் குணச்செல்வ னென்றுந் தெய்வவழி பாடுடைய
                                                 தீரவா னென்றுஞ்
சாகரஞ்சூ ழுலகிலிவன் றன்மைபொலிந் தோங்கத் தவாநிலைதேர் மூலிகைச்
                                               சரளங்காட் டினரே.

* (கெழுமல் - அமைவுறக்கற்று முளைத்தல்.)