பக்கம் எண் :

82

11. 

இவ்விதமாய் மனுமுறையிற் பிரபலமா மாறங் கியற்றியிரு ளகற்றியபின்
                                             பஃதாண்டு கழித்து
எவ்வமெலாந் தொலையப்பின் பிவனுலகிற் காமா றியற்றிவினைத்
                            தொடரருப்பந் தொலையவருள் புரிவான்
செவ்விதேர் சிகிச்சையணி மருந்துசிந் தூரந் தெளிபற்ப முதலாய
                                         விலேகியங்கள் குளிகை
அவ்வியமி லாமற்றந் தம்மரபு விளங்க வமைமகனா கச்சித்த
                                         ரொருவனைத்தந் தனரே.
 

12. 

மருத்துவந்தேர் தொழிலிவனால் வழிவழியே யுலகர் வருந்துதுன்ப மகன்றுமங்
                                              களமெய்தி மகிழப்
பொருத்தமுறுஞ் சிகிச்சைபலப் புரிந்திவணே ருற்ற புண்ணியங்கள்திரண்டுபல
                                               வூழிமிகப் பெருக
அருத்தமிட மேவலா தியவெல்லா மமைந்திங் கன்பெலா மணிமணியா
                                              யழகமைந்து பெருக
திருத்தமிஞ்சுஞ் செய்கையெலாந் தெய்வருடழைக்கத் தேசவர சாள்மன்னர்
                                          செவ்வியில்வாழ் பவனே.

வேறு.

13. 

அளிதூங்குஞ் சுரும்பார்க்கு முய்யா னத்தி லழகுயருந் தெங்குபுளி
                                              கோங்கு வாழை
களிதூங்கு மசோகத்தி யாச்சா வாத்தி கான்மர மிலந்தைபனை கனகற் சூரம்
முளிதூங்கு கொன்றைநெல்லி நாவல் சந்த முருங்கைசண் பகமீந்து புன்னை
                                                    நார்த்தை
கிளிதூங்கு மாப்பலா வில்வம் பாலை கேழ்புன்னை பாதிரியுந்
                                                தமாலமாபலவே.

வேறு.

14. 

மகர முகுக்கும் பட்ரோஜா கொடிசம் பங்கி வளர்மல்லி
சிகர குசுமம் மனரசிதந் தேர்பம் பில்மாஸ் மாதுளையும்
பகர விலஞ்சி மரையாம்பற் பகரும் நீலோற் பலம்பிசங்கந்
தகரக் கரிய குழலார்கள் தங்குஞ் சோலை களிற்சமையும்.
 

15. 

காணு மெழுதா வெழுத்ததனிற் கலந்த வனேக பிரிவெழுத்துந்
தோணுஞ் செடிபூங் கொடியுருவந் துலங்கு விளிம்பின் பூங்கொடியுந்
தாணு மெழுத்தின் வகையறைகள் சமையும் வளயெந் திரசாலை
பூணு மாடி பங்களா புகழ்கல் மேஜை பீரோக்கள்.
 

16. 

கரும்பொ னழகார் கேட்டமைத்துக் கைதே ரூலிங் பைண்டிங்கும்
அரும்பு மாட்பிரஸ் கிளேஸ்ரீம்கள் அலமார் மைக ளமையுருளும்
விரும்பு முலகர் கட்கினிதாய் விளங்கு நோடீஸ் புக்பாரங்
கருதும் டைப்ஸ்கள் வார்ப்பிடங்கள் காட்சிக் கியலு மதிசயமே.
 

17. 

கால தேய நிகழ்வதனாற் கலந்த வுலகர் தமைவாட்டக்
கோல வினையின் தொடர்பு தொட்டுக் கூற்றாய்வந்தநோய்கள்வகை
மூலங் காலந் தெரிந்துணர்ந்து முதிருந் தேகங் கூறுணர்ந்து
ஞால மதனில் மூலிக்கை நாட்டந் தெரிந்த நயசுகுணன்.

வேறு.

18. 

தேனொழுகு மிலேகியமாத் திரைகட்டுவாதி சிறந்தரசா யனங்கங்சிந்
தூரநற் பற்பம்வானொழுகு மமுதஷர் பத்துமுதலாய மாமருந்து வகைகள்வட
கங்கள்குழித் தைலம்கானொழுகு புட்பவகை பன்னீ ரத்தர் காணும்நோ
                                                  யாளிகள்கை
கண்டபரி காரம்மீனொழுகு வானுலக விந்திரனைப்போல மேன்மையில் லறம்நடத்தும்விவேககண் ணியனே

வேறு.

19. 

பூர்க்கு முலக பாஷைகளிற் பொலிவாய் விளங்கிப் புகழ்மலிந்திங்
கார்க்கும் நலந்தே ரருமையுய ரரங்கத் திருந்த மூவேந்தர்
சேர்க்குந் தெய்வச் சுவைபழுத்துத் தெளிந்த வமிழ்தாந் தமிழ்மொழியிற்
றூர்க்கு மனாதித் தொன்மையினைத் துலங்க விளக்குஞ்சுயாதிபதி.