| 20. | நறவு துளிக்குந் துணர்மலியு நபசயத் தோங்கும் பணையில்லில் உறவோ ருடனே வுண்டுகளித் துவக்குஞ் சீல னுளப்புனிதன் துறவோர் காணிற் சூழ்ந்தன்னோர் துணையை நாடுந் தோன்றலனான் புறவைக் காத்த புரவலன்போற் புகழ்தேர் நிலையிற் புறஞ்செல்லான். |
| 21. | அன்ப ரிதய வுளக்கோயி லார்ந்த பரமா னந்தவெள்ளன் துன்ப மனதிற் றட்டாத துங்கத் துணையோ ரவையகலான் இன்ப நிறைவாந் துலாக்கோலி லிருந்திவ் வுலகோர் இடர்தீர்ப்பான் முன்பி னுணர்ந்த நேயம்போல் முகவி லாச முறுவலுளான். |
| வேறு. |
| 22. | கலைபயின்ற வடிவழகன் கலியாண முகவழகன் கனிந்த வின்சொன் மலைபயின்ற பெருங்குணத்தன் வரம்பயின்ற வள்ளலனா வளமா றாது நிலைபயின்ற நெறியழகன் நிசம்பயின்ற சொல்லழகன் நினைவின் மேலாந் தலைபயின்ற துலையழகன் தாரதம் மியமிலாச் சதுரன் மன்னோ. |
| வேறு. |
| 23. | கண்ணார் நுதலா னருள்சுரந்த கருணை விலாசந் தேர்தமிழின் எண்ணார்ந் தொளிரு மியல்தேர்ந்திங் கேகத் துவத்தி னிலைதெரிந்து பண்ணார்ந் தொளிர்பாட் டியல்தேர்ந்து பயிலுந்தாள சதிலயைசீர் விண்ணார்ந் தியல்கின் னரராதி மேன்மை விளங்கச்செயும்விதுரன். |
| 24. | உலகத் தனாதி நிலைகளிலே யோங்கி யொளிருந் தமிழ்மொழியி விலகி யொளிரு மெய்ஞ்ஞானத் தியல்தே ரிசைநா டகத்தமிழின் றிலகம் போலு மருமையினைச் செலுத்துந் தெய்வச் சுருதிலயை கலகங் காணா விராகத்தின் கணக்கைத் தெரிக்குங் கண்காணி. |
| 25. | ஊறு தோன்றா நிலையுணர்ந்தங் குதிக்கு மேலா முபசாந்தந் தேறு நிலைநின் றறிவின்மயத் தியானந் தேர்சின் மயமுற்று வீறு மிராஜ யோகியர்கள் மேலாம் நிலைதேர் விவேகத்தன் ஆறு தெரிந்தோ ரமுதூறும் வளவாண் டகையா ரியனாவான். |
| வேறு. |
| 26. | இயலிசைநா டகத்தியலை யகத்தியரா றிரண்டாக்கு மேர்போ ராமல் அயலானா ரிடும்பைபல வாற்றிமிஞ்சு மசட்டைகுண வகந்தை மாளு மயலானார் கட்கெலா மன்னுமெழு தாவெழுத்திவ் மகிழ்ந்தளித்தான் கயல்புரளுஞ் சுனைசோலை தஞ்சைவா ழாபிரகாங் கண்யன்மன்னோ. |
| வேறு. |
| 27. | பொன்னா லிலகு மனையாளும் புவியா விலகு மகண்மாருந் தென்னா தெரிய லிசைநாட கந்தேர் செழிப்பின் சிறப்போசை முன்னே விளங்கு மாடகத்தின் முதித மோங்க முழக்குமெனில் என்னே தெய்வ மாதர்களி னியல்பை விளக்கு மெண்டிக்கும். |
| 28. | வாணி நிகர்த்த மனையாளும் வலத்திற் கியைந்த மகண்மாருஞ் சாணை பிடித்த விரத்தினம்போற் றகுந்த முறையிற் சுதிசேர்த்து வீணை முதலாம் வாத்தியத்தில் விளங்கக் கைதேர் விதிதவறா தாணை யுடன்வீ சத்தரைக்கா லரைமுக் காலிற் சுரவமைப்பை. |