| 29. | பலஞ்சே ரனேக காலத்திற் பலித்த தவத்தின் பண்பதனாற் குலஞ்சே ரரிய மானுடத்திற் குறிக்குந் தெய்வக் கணவகையிற் பலஞ்சே ரீசன் பத்தியுபா சனையோ டிசையா னந்தத்தில் அலஞ்சேர் பாக்கி யந்தழைக்கு மருமை யதனை யசைப்பரிதே. |
| வேறு. |
| 30. | சங்கீத ரத்தினா கரர்ஸ்தாயி யொன்றிற் றகுஞ்சுருதி யிருபத்தி ரண்டெனநிச் சயித்தார் அங்கதமா யமைந்தபல ருட்கருத்தை யகற்றி யதற்கியைந்த கணக்காலங் கமைமேற்கோல் காட்டி சங்கதமா யிருபத்தி நான்குசுரு திகளே சாசுவத மென்னநிச் சயத்தகைமை யுற்றான் இங்கிதமா கியசுகுண னேந்தலெனு மாப்ரகாம் இன்னமுத சுருதியிற்றே ரிருடியென லாமே. |
| 31. | முதற்சங்க முன்பல்லா யிரவருட கால முன்முழங்கு மாய்ப்பாலை வட்டப் பாலையையு மதற்கிணையாந் திரிகோணஞ் சதுரப்பா லைகட் கந்நாளி லகத்தியனார் சிறுபெருநூ லமைத்தார் குதர்க்கமிறொல் காப்பியனார் சார்பணியிற் சிறந்த கொள்கையியற் பன்னிரண்டாய்க் குறித்தணிநூற் கொடுத்தார்புதல்வர்குரு முனிவர்வழி பன்னிருவர் செயுநூற் புணர்பறியா விளம்புலவர் புறம்போந்தா ரொளித்தே. |
| 32. | ஆயப்பா லையிலுள்ள வெழுபாலை களையும் ஆம்வட்டப் பாலையீ ரிரண்டெனும்யாழ் களையும் நேயமுட னதில்நான்கு சாதிகளின் வகையில் தேருரிய விராகங்க ளத்தனையுந் தெளிவாய் ஆயகலை கர்நாட பூர்வசங்கீ தத்தி லமையிசைப்பா வழங்குநுட்ப மாஞ்சுருதி வகையிற் றூயவறு பதுமேலு தாரணங்கள் தோன்றச் சொல்லியெழு தாவெழுத்திற் றுலங்கக்காட் டினனே. |
| 33. | விரும்புகர்நா டகச்சுருதி விளைநுட்பக் கருத்தில் மேனாட்டார் களின்கணக்கை மேனிறுத்தி யொதுக்கி அரும்புமுறைப் படிநுட்ப மாங்கணக்கின் றொகையை அறிந்துகொள்ளும் படிதெளிவாய்க் காட்டினது மன்றி திரும்புஞ் சா பாமூன்றி லொன்றுகால்மா காணி தேர்காணி யரைக்காணி கீழரையே யரைக்கால் கரும்பாமுக் காணிமுந் திரியிம்மி யேழு கணக்கிடும்போ திற்பலரின் முறைகளைக் கண்டித்தே. |
| 34. | பூர்வதமிழ் முறையாகு மிசையிலா ளத்தி பொருந்தச்செய் முறைகளிலும் நடஞ்செய்முறை களிலும் ஆர்வவபி நயஞ்செய்முறை கொட்டுங்கரு விகளி லணிதானங் காட்டியாழ் மீட்டுமுறை களிலுஞ் |