பக்கம் எண் :

85

சார்வேதங் கணிதிசோ திடவைத்திய சரநூற்
    றகுமொழிகள் வகைசங்கீ தத்திலுள தென்னப்
பார்வைபெறுங் கணக்குகளிற் கைதேர்ந்த நிபுணன்
    பாக்கியனாப் பிராம்பண்டி தன்றிறமை பலவே.
 

35. 

ஏர்போங்குந் தூலசூக் குமகார ணத்திற்
    கியல்யாழி னமைப்புகள்மா னுடதேகத் தமைப்பாய்ச்
சார்போங்குஞ் சுருதிசுரங் காரணதே கத்திற்
    றகுங்கணக்கி னோசைநிலை யலைகளள வொடுமுன்
பூர்வதமிழ் மக்கள் னாதியினி லாசியா
    புகழ்துருக்கி யைச்சார்ந்த மெஸ்பித்தோ மியாவில்
ஆர்வமுடன் பாபிலோ னினிவேயா முதலா
    மமைநாடு களிற்சென்றங் கமைத்தார்பட் டினங்கள்.
 

36

கிரமமுறைப் படிவெகுவா யரசாண்ட வன்னோர்
    கிருட்டினன்கொள் மச்சாவ தாரவடி வதனை
பிரமையிலா வொழுக்கமுடன் பூசித்த தவந்தேர்
    பிரதான தமிழ்மக்கட் பெருந்தொகையா ரென்றுஞ்
சிரமமிலா மீன்வடிவாற் காப்பாற்றப் பட்டோர்
    சிறப்பார்சத் தியவிரத பாண்டியன்றென் கூடற்
பிரமநிலை தெரிந்தாண்டு மீன்கொடியை யுயர்த்தும்
    பிரபலபாண் டியரென்னப் பெரிதுவக்கின் றனரே.
 

37.

இரண்டாமா யிரவருட முன்றமிழ்நூற் களிலே
    யேபிரேயு சீத்யகீரீக் ஜர்மன்சான்ஸ் கிரீடிற்
றிரண்டமொழிக் கலப்புகளைச் சிறதுங்கண் டறியாச்
    சிறப்பதனாற் றமிழ்மொழியே முதல்மொழியாந் தகைமை
தரணிமுழு தோங்கிவளர்ந் துலவியதொன் மையினாற்
    றனித்தெய்வ மொழியெனத் தவமகிமை யுற்றோர்
இரணியம்போற் போற்றுதிரு மந்திரந்தே வாரம்
    இயற்றிருவா சகவருட்பா வேற்றத்திற் பலவே.
 

38. 

இயலமைப்பாற் பிராணிகளி லெழுமொலிக ளெல்லா
    மேற்கனவே தமிழெழுத்தா லெழுதொனியைப் கொண்டும்
செயன்மிகுமோர் கசடதப வெழுத்துக்கள் சிறப்பிற்
    றேர்ந்தவின மொன்றாகித் தெய்வமொழி யாகி
அயலாகும் பாஷைகளின் றுணையெதிர்பா ராமல்
    அறிதற்கும் பயிலுதற்கு மதிகவிலே சாகி
மயலொழியத் துதித்தற்கு மமிழ்தினுந்தேர் தெய்வ
    வல்லபத்தைத் தருமொழியாய் வழங்கிவந்த திதுவே.
 

39.

 காரணகா ரியந்தேர்ந்து கதிமையர சாளுங்
    கைக்குவார் மகாராஜா கனகபரோ டாவில்
ஆரனாசங் கீதவித்ய கான்பரஸி வருடேர்
    ஆபிரகாம் கிழத்தியம்மாள் பாக்கியவருந் ததியும்