பக்கம் எண் :

86

பூரணசங் கீதவித்ய வாத்யவீ ணைகளிற்
    பொருத்தமுறப் பாடுங்கின் னரமிதுன மகண்மார்
தாரங்கொள் மரகதவல் லியுமவணேர் சகச
    சதித்துவங்கொள் கனகவல்லிக் கிணையாவ ரெவரே.
 
40.அன்னாணீள் தவந்தேறுஞ் சுந்தரபாண் டியப்பேர்
    அமைபுதல்வன் அணியிசையிற் றும்புருவ ரன்னான்
பொன்னார்ந்த துரைராஜ மருமகன்பாண் டியனும்
    புகழ்பாக வதராம்பஞ் சாபகேச வாசான்
தென்னாரி ராஜசபை யினிலாயப் பாலை
    திரிகோண சதுரவட்டப் பாலைப்பண் களையும்
மன்னார்ந்து புகழ்கூற மகிழ்பெரியர் வாழ்த்து
    வலமங்க ளம்பாடி வரையறையுற் றனரே.
 

************************

சவசித்தாந்த மகாசமாஜ அத்தியட்சரும், சென்னை, மெய்கண்ட சந்தான சபைக்காரியதரிசியும், செம்பியம் ஹானரெரி மாஜெஸ்டிரேட்டுமாகிய பண்டிதரத்னம். மகா-ஸ்ரீ புழலை திருநாவுக்கரசு முதலியாரவர்களியற்றியது.
________

அறுசீர் விருத்தம்.

பஞ்சநதி சூழ்தஞ்சை மாநகர்செய் முதியதவப் பயனாய் வந்து
மஞ்சணியும் வானுலக மருத்துவருங் கண்டுவக்க வகையினாய்ந்து
தஞ்சமென வந்தடைவார்க் கஞ்சலென நோய்நாடித் தவிர்க்கு மேலாம்
விஞ்சைமிகு முயர்கருணா னந்தனவன் வைத்தியத்தின் மிகுந்த செல்வன்.

 
(1)
 
தன்னிகரில் கடல்புடைசூ ழுலகமெலாந் தனிக்குடைக்கீழ்த் தனித்தெஞ்
ஞான்றும்மன்னியவான் றொடுமுனைசெங் கோலோச்சி யரசாளு மகிமை
                                                     சான்ற
துன்னியவாங் கிலநற்றா யனையதுரைத் தனத்தவராற் றுலங்கத் தந்த
பன்னரிய மிகுபுகழ்வாய்ந் திலகுபெரும் ராவ்சாஹெப் பட்டம் பெற்றோன்
 
(2)
 
அன்னவன்யா ரெனிலனைத்தும் பெற்றிலங்கு மியல்புறுமெய் யறிவான்மிக்க
சொன்னதொரு மொழிக்குமொழி தித்திக்கு மினிமைதருந் தூய்மை யாளன்
நன்னலங்கட் குரியவெலாம் புரியுஞ்சற் குணங்களொடு நவிலுந் தொன்மை
என்னவுங்கற் றுணர்ந்தவுயர் ஆப்பிரகாம் பண்டிதரென் றியம்பு நல்லோன்
 
(3)