பக்கம் எண் :

87

பலகலைக்கு முயரியதா யுச்சியின்மேல் வைத்துமகிழ் பரிவா லென்றும்
நிலவலைய மெலாந்துதிக்கப் பொற்பமரற் புதம்விளைத்த நிகரி லாப்பேர்
நிலவிடுஞ்செந் தமிழ்க்குரிய பலகோடி முறைபிறழா நியாயங் காட்டி
நலமிகுதன் பெருமுயற்சிக் குறுதுணையா ராய்ச்சியினை நன்கு நாட்டி.
 
(4)
 
வடமொழிக்கு முன்மொழிதென் மொழியெனுந்தொல் காப்பியங்கள்
வலிவாச் சொற்றதிடமுறுநற் பிரபலப்ர மாணவகை வகுத்ததொரு திறமை நோக்கிகடனிகர்க்குங் கல்வியினை
யுண்டேப்ப மிடுபவருங் கவின்சேர் வாசஅடலமருஞ் சிறப்புதனை யெடுத்துரைக்க வரிதரிதென் றறைவ தோர்ந்து.
 
(5)
 
பாலையெவ ருங்கண்ட வுடன்பருகு வாரலது பழிப்பார் யாரிந்
நூலையெடுத் தோதவலி யறிவுமிலா நுட்பமதை நோக்குங் கானான்
மேலைவரு வதுமறியா வவாவதனை முன்னிட்டு மீக்கூ றுஞ்சீர்
சாலைதவழ்ந் தோங்குகரு ணாமிருத சாகாரநூல் தந்திட் டானால்.
 
(6)
 

*********************

சென்னை மயிலாப்பூர் ஸென்தோம் கலாசாலையிற் றலைமைத் தமிழ்ப் பண்டிதராயிருந்தவரும் கவரன்மெண்டில் உபகாரச்சம்பளம் பெற்று வருபவருமாகிய தில்லையம்பூர்த் தமிழ்ப்பண்டிதர் ஸோமயாஜி
மகா-ஸ்ரீ வேங்கடராம ஐயங்கார் இவர்கள்

பாடியுதவிய சாத்துகவி.

________

ஆசிரியப்பாா.

5.
 
உலகிற் பலகலை வித்தைக ளோங்கும்
இக்கலி நாளின் கவினை யுரைக்கின்
அறநெறி யருள்நெறி யனைத்து முன்னிலை
மாறிப் புதுநடை மலிந்தன வெங்கும்
நூதன விவேகிகள் நுழைந்தார் பலரும்
  
10.
 
பதவியுஞ் சுகமும் போகமும் பலிக்க
மற்றதை நெஞ்சில் மதியா மாண்பினர்
முன்னிலா நோயும் முறையிலாக் கல்வியும்
இயானென தென்பது மிணைந்து வேரூன்றின
இத்ததி கண்டே யிணையிலா வரமாம்