15. | சமயசஞ் சீவி தரைமே லென்னக் கருணையே நிதிபோற் கண்ட தொன்றென ஆநந்த வெள்ள மதுவே யுருவென ஒருமா சுகுணரை யுதவினன் பரமன் கலியுமிங் கில்லை கடுநோ யில்லை |
20. | ஆவினைக் காப்பதில் ஆவலே மிக்கவர் அறிவின் மிக்கவர் அருமறை காப்பவர் தன்வந் தரிபோற் றரைநோ யழிப்பவர் இருபத் தைந்தா மாண்டி னளவும் காடும் மலையுங் களைத்தே திரிந்தவர் |
25. | பழநடை தன்னைப் பாரிற் காக்க கருணா நந்தராய்க் காணவே வந்தவர் சுருளி மலையிற் றோன்றிய சித்தரை அடிபணிந் தவர்பால் முப்பூச் சூக்குமம் முறையா யுணர்ந்தே முனியருள் பெற்றா |
30. | ரொப்பிலாச் சித்தரும் ஒருரை விண்டனர் நீயே யுலகில் நீளிசை பெறுவாய் மற்றொரு சித்தரும் மகிழ்ந்தே யருளுவர் ஆயுளும் பெருகும் அறிவா ராய்ச்சித் துறையுள் முதன்மை முற்றுவை நிச்சயம் |
35. | சோதிடம் வைத்தியம் சூக்கும நாத விந்துவின் சூக்குமம் விரிசங் கீதம் ஆமிந் நான்கினு மனைத்துல கோரும் போற்றுவர் சாற்றுவர் புனிதநீ யெனவே சந்ததி யுடனே சம்பத் தெல்லாம் |
40. | தாமே வந்திடுந் தரைமே லைந்து கிரகமே காதசம் கிடைத்த சிறப்பால் கன்னியே லக்கினம் கனசுக நான்கிற் சந்திரன் செவ்வாய் சதிருறச் சார்ந்தார் பகையே யுலகிற் பாரா ரிவரென |
45. | சூரியன் றோன்றல் சூழ்ந்தான் விரயம் சூரியன் றசையே முதலாய் நேர்ந்தது கடலி னெழுந்த கடுமா விடத்தைக் கண்டத் தடக்கிய கால கண்டர் போலவே பிணியைப் போக்க வந்தவர் |
50. | உருத்திரர் தன்மையை யுலகிற் குணர்த்த இரவுத்ரி யாண்டி லித்தரை வந்தவர் சங்கீத சங்கந் தஞ்சையி லாக்கிப் பல்லாண் டதனைப் பாலித் தப்பா பரோடா வரசர் பண்புறு சபையி |