பக்கம் எண் :

765
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்

மூன்றாவது அட்டவணை.

நெ.

கர்த்தா
இராகத்தின்
பெயர்.

மேளம்.

இராகத்தின் பெயர்.

ரி

நி

     2 4 62 4 62 4 2 4 62 4 6
1மாயாமாளவம் ...15மாருவ ... ...2............72...2............7
2மாயாமாளவம் ...15பரசு ... ...2............72...1............7
3மாயாமாளவம் ...15கௌளிபந்து ...1............73...1............7
4சலநாட்டை ...36நாட்டை ... .........7......62.........7......6

ச-ப, ச-ம முறையில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கானம் பண்ணினார்களென்று தெரிகிறது.

இது போலவே பூர்வ பாகத்திலாவது உத்தரபாகத்திலாவது ஒவ்வொரு அலகைக் குறைத்தும் கூட்டியும் கானம் பண்ணியிருக்கிறார்களென்றும் இரண்டு மூன்று நான்கு சுரங்களில் குறைத்தும் கூட்டியும் கானம் பண்ணியிருக்கிறார்களென்றும் தோன்றுகிறது.

எத்தனை சுரங்களில் அலகுகள் குறைந்து வருகின்றனவோ அவைகள் பாடுகிறதற்குக் கடினமாயும் கேட்பதற்கு இனிமையாயுமிருக்கும். தற்காலத்தில் நாம் பாடும் ஆனந்த பைரவி, சாவேரி, புன்னாகவராளி, பூர்வி, பரசு, மத்தியமாவதி, காப்பி, சகானா, பலாம்சா, கேதார கௌளை, கேதாரம், அமீர்கல்யாணி முதலிய இராகங்களில் அதைக் காண்போம். இது போல் பல சுரங்களில் அலகு குறைந்து வரும் இராகங்கள் மிகவும் இன்பமானவையென்று நாம் அறிவோம். வட்டப்பாலையில் 22 அலகுகள் வைத்துப் பாடும் முறையைப் போலவே திரிகோணப்பாலையும் சதுரப்பாலையும் வெவ்வேறு சுரங்களின் அலகுகள் குறைத்துப் பாடும் வழக்கமுடையனவாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆயப்பாலையில் பிறக்கும் பதினாலு கோவைகளும் ஒவ்வொன்றும் 24 அலகுடையதாயிருந்தாலும் அவைகளுக்கு இரண்டிரண்டு அலகுகளுடையவான பன்னிரண்டு இராசிகளிலுள்ள சுரங்கள் வருகின்றனவே யொழிய அதற்குக் குறைந்த சுரங்கள் வழங்கவில்லை. தற்காலத்தில் வழங்கி வரும் 72 மேளக்கர்த்தாவின்படி அரைச் சுரங்களே வழங்கி வந்தனவென்று தெரிகிறது.

ஆயப்பாலை ஒரு இராசி வட்டத்தில் வரும் பன்னிரு அரை சுரங்களில் ஏழு சுரம் பாடப்படுவதாம்.

வட்டப்பாலை ஒரு இராசி வட்டத்தில் வரும் பன்னிரு சுரங்களின் 24 அலகில் இரண்டு சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்து 22 அலகாக ஏழு சுரங்கள் சொல்வதாம்.

திரிகோணப்பாலை மேற்காட்டிய வட்டப்பாலையைப் போல இணை, கிளை, நட்பாக் வரும் மூன்று சுரங்களில் அலகு குறைத்துப் பாடுவதாம்.

சதுரப்பாலை இணை, கிளை, நட்பு, இரண்டாநரம்பு என்னும் நாலு சுரங்களிலும் நாலு அலகு குறைத்துக் கானம் செய்வதாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. அலகு குறைத்துப்