பக்கம் எண் :

90

பிரயோஜனமுள்ளதாயிருக்குமென்பதற்குத் தடையேயில்லை. நான் சொல்லுவது சிலருக்கு வித்தியாசமாகத் தோற்றினாலும் தோற்றலாம். அதென்ன வென்றால் அவர்கள் கண்டுபிடித்த புது முறையானது இங்கிலீஷில் சிறு புத்தகமாக எழுதப்பட்டு இங்கிலீஷ் வாசிக்கக்கூடிய யாவருக்கும் கொடுக்கப்படும் பட்சத்தில் அதிக நன்மை பயக்கும். இந்நூலாசிரியர்க்கு இது கூடாத காரியமல்ல. அவர்கள் இதையும் செய்வார்களானால் கடந்த பல வருஷங்களாக ஜனங்களுக்கு அவர்கள் செய்திருக்கும் பல நன்மைகளோடு இதுவும் ஒரு நன்மையாகும். இந்த நூல் தழைத்தோங்கி நன்மை பயக்கவேண்டுமென்பதே என்னுடைய மனப்பூர்வமான எண்ணம்.”

(ஒப்பம்) S. சுப்பிரமணிய ஐயர்.

The opinion of the Honourable Sir P.S. Sivaswamy Aiyer, Avl.,

K.C.S.I., C.I.E

SUDHARMA,

EDWARD ELLIOT’S ROAD,

MYLAPORE.

Rao Sahib M. Abraham Pandither has for several years been an enthusiastic devotee and patron of the science and art of South Indian Music and has been with tireless industry prosecuting an investigation into the number of Srutis in vogue in Karnatic Music. He has also from time to time offered practical demonstrations of his theories at the various musical conferences convened or attended by him.

Expert opinion may be divided as to the correctness of his conclusions but there can be no two opinions as to the zeal and learning of the author or the value of the example set by him of a scientific study of the theory of Hindu Music. He deserves to be congratulated on the issue of the portly volume named ‘Karunamirtasagaram which is the outcome of his labours in a neglected field.

12 - 4 - 1917.

(Sd. ) P. S. SIVASWAMY AIYER.

“Rao Sahib M. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் அநேக வருஷங்களாகத் தென்னிந்திய சங்கீத சாஸ்திரத்தையும் அதன் விதிகளை அனுபோகமாய் உபயோகிக்கும் முறையையும்பற்றி வெகு சிரத்தையுடன் ஆராய்ந்திருப்பதுமல்லாமல், சங்கீத வித்தைக்கு ஒரு போஷகராயும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் சுருதிகளை நிச்சயம் செய்வதில் இடைவிடாத முயற்சியோடு உழைத்திருக்கிறார்கள். இதுவுமல்லாமல் தான் கூட்டிய சங்கங்களிலும் தான் ஆஜராயிருந்த சங்கீத சங்கங்களிலும் இது விஷயத்தை அநேகந்தரம் ருசுப்படுத்தியுமிருக்கிறார்கள்.

அவர்கள் முறை சரியோ தப்போ என்பதைப்பற்றி சங்கீத வித்வான்களில் பலர் பல அபிப்பிராயம் கொள்ளலாம். ஆனால் நூலாசிரியருடைய வைராக்கியம் கல்விகளைப்பற்றியாவது, இந்திய சங்கீத சாஸ்திர ஆராய்ச்சி விஷயத்தில் அவர்கள் காண்பித்த முன் மாதிரியைப்பற்றியாவது இரண்டு அபிப்பிராயம் இல்லை. எல்லாரும் ஏகவாக்காய் அவர்களைப் புகழவேண்டியிருக்கிறது. வெகுகாலம் அசட்டை பண்ணப்பட்டிருந்த சங்கீத விஷயத்தில் அவர்கள் செய்த வேலையின் பலனாக இப்போது அச்சிடப்பட்டிருக்கும் கருணாமிர்த சாகரம் என்ற பெருநூலை எழுதியதற்காக நாம் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துதல் சொல்லுகிறோம்.”

(ஒப்பம்) P. S. சிவசாமி ஐயர்.