பக்கம் எண் :

91

The opinion of
Dewan Bahadur, the Honourable Mr. Justice, T. Sadasivier, Avl. B.A., M.L.,

Madras.

A copy of Karunamirta Sagaram by M. R. Ry. Rao Sahib M. Abraham Pandither of Tanjore has been sent to me. It is an elaborate treatise on the theory and practice of Music, covering about a thousand pages of the demi-quarto size. One of the many knotty problems that the work grapples with is the exact number of Srutis in the Octave. Whereas Saranga Deva and those who profess to follow him claim to have fixed the number at twenty two, Mr. Pandither seeks to establish that it is twenty four. His conclusion rests upon a scholarly investigation into the art of music in general and that of the ancient Tamils in particular - a conclusion, moreover, whose truth is said to have been verified in the actual singing of his daughters.

It is not given for a layman like myself to speak with authority on the relative merits of the two theories. But it may be observed that there are musical experts who have given their hearty support to the theory which Mr. Pandither claims to have discovered. There can be no doubt that those interested in the divine art, especially as it prevails and has prevailed in India, will find the present work highly interesting and instructive.

In the course of his researches into the state of Karnatic Music, the author has collected a body of valuable information regarding the greatness of the language, the literature and the arts of the ancient Tamils, which must prove very helpful to students of the history of Tamilagam.

5 - 3 - 17.

(Sd. ) T. SADASIVIER.

"மகா---ஸ்ரீ ராவ் சாயப் ஆபிரகாம் பண்டிதரவர்களால் எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூல் என் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அது இந்திய சங்கீத சாஸ்திரத்தைப்பற்றியும், அதின் விதிகளை உபயோகிக்கும் விஷயத்தைப்பற்றியும் பேசுகிற ஒரு விஸ்தாரமான நூல். டெமிக் குவார்ட்டோ சைசில் ஆயிரம் பக்கங்கள் அடங்கியது. அந்த நூல் எடுத்துப் பேசும் சிக்குமுக்கான அநேக விஷயங்களில் ஒன்று எதென்றால் ஒரு ஸ்தாயியில் எத்தனை சுருதிகள் உண்டு என்பதாம். சாரங்கதேவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சுருதிகள் 22 என்று சொல்லுகிறார்கள். Mr. பண்டிதரவர்களோ அது 24 என்று ஸ்தாபிக்க முன்வந்திருக்கிறார்கள். இந்திய சங்கீத சாஸ்திரத்தை, விசேஷமாய் பூர்வ தமிழரின் சாஸ்திரத்தை வெகு சாமர்த்தியத்துடன் ஆராய்ச்சி செய்ததின் பலனாக இந்த அபிப்பிராயம் சாதிக்கப்படுகிறது. அதுவுமல்லாமல் இந்த சுருதிகளின் உண்மை அவர்கள் குமாரத்திகள் தாங்களே பாடி ருசுப்படுத்தினதால் நிச்சய மாக்கப்பட்டிருக்கிறதாகவும் தெரியவருகிறது.

இரண்டுவித அபிப்பிராயங்களில் எது சரியென்று அதிகாரத்துடன் எடுத்துச் சொல்வது சங்கீதம் தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு இயலுவதல்ல. ஆனால் நான் சொல்லக்கூடியது Mr. பண்டிதரவர்கள் கண்டு பிடித்திருக்கிற முறை சரியானதென்று ஒப்புக்கொள்ளும் சங்கீத விற்பன்னர்களும் உண்டு என்பதொன்றே.

தெய்வத்தின் அம்சம் என்று சிறந்து விளங்கும் சங்கீத வித்தையில், அதிலும் இந்தியாவில் வழங்கி வந்ததும் இப்போது வழங்கியும் வரும் சங்கீதத்தில் பிரீதியுள்ளவர்கள் யாவரும், இந்த நூலை மிகவும் அருமையாகக் கொண்டாடிப் பிரயோஜனம் அடைவார்கள்.