கர்நாடக சங்கீதத்தைப்பற்றிய ஆராய்ச்சி செய்த விஷயத்தில் தமிழ் மொழியின் மேன்மை பண்டைத் தமிழருடைய நூல்கள் மற்ற வித்தைகள் முதலிய விஷயங்களைப்பற்றி அருமையான அநேக உண்மைகளைக் கண்டுபிடித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார்கள். இந்த அபிப்பிராயங்கள் தமிழகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பெரும் பயன் தருமென்பதற்குச் சந்தேகமில்லை. " (ஒப்பம்) T. சதாசிவ ஐயர். The opinion of the Honourable Mr. Justice T. V. Seshagiri Aiyar Avl. | | ANNANDALE, | | T. V. SESHAGIRI AIYER. | HALL’S ROAD, EGMORE, | | | MADRAS, S.C. |
Rao Sahib M. Abraham Pandither is well known throughout Southern India as a gentleman who has studied Indian Music scientifically, and one who has interested the public by his scholarly disquisitions on it. The present great work while it is primarily devoted to the exposition of the science and to correcting some popular mis. conceptions regarding it, indirectly gives a part of the history of Southern India as far as it is gatherable from musical compositions. The history of Tamil literature is also touched upon in the course of the book. I have gone through portions of the book and I find the disquistions both instructive and highly interesting. The Pandither has laid the Tamil public under deep obligations to him. | 9 - 4 - 1917. | (Sd. ) T. V. SESHAGIRI AIYAR. |
"ராவ் சாயப் M, ஆபிரகாம்பண்டிதரவர்கள் இந்திய சங்கீதத்தை சாஸ்திர விஷயமாய் ஆராய்ந்தறிந்த சிறந்த வித்வான் என்றுதென்னிந்தியா முழுவதிலும் கொண்டாடப்பட்டவர்களா யிருப்பதுமல்லா மல் தன்னுடைய கல்விவாய்ந்த சாமர்த்தியத்தினால் மற்றவர்கள் சங்கீதத்தில் பிரியப்படும்படி செய்தவர் என்று பேர் வாங்கினர்கள். இப்போது அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் பெரும்நூலானது சங்கீதத்தை விஸ்தரிப்பதற்கும் அது விஷயமாய் சாதாரணமான ஜனங்கள் கொண்டிருக்கும் தப்பான அபிப்பிராயங்களைக் கண்டிப்பதற்கும் முக்கியமாக எழுதப்பட்டபோதிலும் இசைத் தமிழைப்பற்றிச் சொல்லவந்த விடத்தில் தென்னிந்திய சரித்திரத்தை எவ்வளவு தூரம் சொல்லக் கூடுமோ அவ்வளவு தூரம் அது எடுத்துச் சொல்லுகிறது. தமிழ் நூல்களின் சரித்திரமும் அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. புஸ்தகத்தின் சில பாகங்களை நான் வாசித்தேன். சொல்லப்பட்டிருக்கும் விஷயமானது அதிக பிரயோசனமுள்ளதாயும் வாசிப்போரின் மனதைக் கவரக்கூடியதாயுமிருக்கிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்தோர் யாவரும் பண்டிதரவர்களுக்கு அதிக கடமைப்பட்டிருக்கிறார்கள்." (ஒப்பம்) T. V. சேஷகிரி ஐயர்.
|