பக்கம் எண் :

93

The opinion of Rao Sahib, T. Ramakrishna Pillai Avl.

B. A., F. M. U. M. R. A. S., F. R. H. S.,

THOTTAKKADU HOUSE,

MADRAS 26TH FEBRUARY, 1917.

I have gone through Mr. Abraham Pandither’s book on Indian Music. Apart from its merits as a book on the subject, there is much in it ot interest the scholar engaged in the study of Tamil language and literature. I have no doubt when the book is published, it will form a valuable contribution to the subject and also furnish information on a variety of other subjects. I take this opportunity of congratulating the author on his havin produced a work of such immense value.

(Sd. ) T. RAMAKRISHNA PILLAI.

“Mr. ஆபிரகாம் பண்டிதரவர்கள் இந்திய சங்கீதத்தைப்பற்றி எழுதிய புஸ்தகத்தைப் பார்வையிட்டேன். சங்கீத விஷயமாய் அதற்குள்ள அருமையையல்லாமல், தமிழ் பாஷையையும் அதில் எழுதப்பட்ட நூல்களையும் படிப்பவர்களுக்குப் பிரீதியை உண்டாக்கக்கூடிய விஷயங்கள் அநேகம் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. புஸ்தகம் வெளியாகும்போது, அது சங்கீத விஷயத்திற்கு அத்தியந்த பிரயோஜனமுள்ளதாயிருக்கும் என்பதுமாத்திரமல்ல, மற்றும் அநேக விஷயங்களையும் எடுத்துச் சொல்லுவதாகக் காணப்படும். இவ்வளவு பிரயோஜனமுள்ள நூலை எழுதிய ஆசிரியருக்கு நான் வாழ்த்துதல் சொல்லுகிறேன். ”

(ஒப்பம்) T. ராமகிருஷ்ண பிள்ளை.

சென்னைக்கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ்ப் போதகாசிரியரும், சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பரீக்ஷகர் சங்கத்தின் அக்கிராசனாதிபதியுமாகிய திரு. த. கனகசுந்திரம்பிள்ளை B. A. அவர்களின் அபிப்பிராயம்.

மகா--ஸ்ரீ ராவ்சாயிப் மு. ஆபிரகாம் பண்டிதரவர்கள் இயற்றியுள்ள கருணாமிர்த சாகரமென்பது மிகவும் பயன்படுவதோரிசைத்தமிழ் நூல். இஃது இசைத்தமிழின் பழமையையும் பெரு வனப்பையும் எடுத்துரைப்பதனோடமையாது தமிழ் மொழியின் மிகப் பெரும் பழமைக்குச் சான்று பகர்வன யாவற்றையும் திரட்டி எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளுமாறு ஒருங்கு சேர்த்து தந்துளது, இன்னும் இந்நூல் இசையின் நுணுக்கத்தைச் சாஸ்திர முறையாய் ஆராய்ந்துணர விரும்புவோர்க்கு வேண்டிய கருவிகளை வேண்டிய மட்டுந் தந்துதவும் சாகரமாவதோடு சிலப்பதிகாரத்துரையில் அடியார்க்கு நல்லாரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ள பழைய இசைத்தமிழ் நூற் செய்யுட்களின் பொருளை உணர்ந்து கொள்வதற்கேற்ற கருவியாயு முள்ளது.

இந்த நூலாற் பண்டிதரவர்கள் சாதிக்கப்புகுந்தது வடமொழியில் சங்கீத ரத்னாகரமியற்றிய சாரங்க தேவர் முதலியோர் கூறுமாறு சுருதி இருபத்திரண்டல்ல, இருபத்து நான்கென்பது. இவ்வாதம் இசையுணர்ச்சி யில்லாத எம்போலியரால் நிச்சயிக்கப்படுவதொன்றன்றாயினும், தமது கொள்கைக்குச் சார்பாகப் பண்டிதரவர்கள்