பக்கம் எண் :

94

எடுத்துரைக்கும் நியாயங்களைக் கொண்டும். அவர்கொள்கைக்கெதிராக மற்றையோர் கூறுந்தடைகளுக்கு அவரால் இறுக்கப்பட்டுள்ள விடைகளைக் கொண்டும், இது காறும் இவ்வாதத்தில் வெற்றி பண்டிதரவர்கள் பால தாயேயுளதென்று எம்மால் இனிது கூறவமையும். இத்தகைய அரிய பெரியநூலை இயற்றித் தந்ததற்காகத் தமிழுலகம் பண்டிதரவர்களுக்கு எஞ்ஞான்றும் கடமைப்பட்டதாயுளது.

(ஒப்பம்) திரு. த. கனக சுந்திரம்பிள்ளை.

சென்னை,

1917-ம் வருடம் பெப்றுவரிt,

26-ந் தேதி.


The opinion of M. R. Ry. T. Chelvakesavaroya Mudaliar, Avl., M. A.,

SUPERINTENDENT OF VERNACULAR STUDIES,

PAICHAIYAPPA’S COLLEGE,

MADRAS.

Karunamirta Sagaram by Rao Sahib M. Abraham Pandithar is a voluminous work in four parts on the theory and art of music. In his systematic and comparative study of the different systems, and from his original researches, the author arrives at the conclusion that the primeval system of the Dravidas (the Tamils) is indigenous and unexcelled. A revival of the study of the ancient classics and their publication have confirmed the status of the Dravidas in the civilization of the old world. Silappathikaram, one of these classics, has been instrumental in determining the age of the Madura Tamil Academy Very approximately. The glossary of Jayangondan and the elaborate commentary of a major portion of this epic by Adiyarkunallar have been instrumental in the hands of Abraham Pandithar in proving beyond doubt the scientific development and finish of the Dravidian system of music. These commentaries were written at a time when only parts of some of the ancient treatises on music were extant.

The compilation and array of facts, and patient research in establishing his thesis, show how the author has accomplished the Herculean task imposed by himself upon himself. Extracts from a number of out-of-the way authors of antiquities afford evidence of the vest erudition of the author and his collaborators.

The book is written in simple modern Tamil prose. Any ordinary student can read and understand the author’s ideas. There can be no doubt that a reader with some knowledge of the theory of music can be immensely benefited by a careful study of the work.

(Sd. ) T. CHELVAKESAVAROYAN.

“Rao Sahib M. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட கருணாமிர்தசாகரம் என்ற நூலானது சங்கீத சாஸ்திரத்தையும் அனுபவ முறையையும் பற்றிப்பேசுகிற 4 பாகங்களடங்கிய விஸ்தாரமான நூல். பலமுறைகளையும் கவனமாய் ஒத்துப்பார்த்து தன் சொந்த ஆராய்ச்சியின் பலனாக, இந்நூலாசிரியர், திராவிடர் அல்லது தமிழருடைய பூர்வ தமிழ்முறையே ஆதிமுதல் தமிழ் நாட்டில் வழங்கிவந்ததென்றும் அதற்கு மிஞ்சிய சங்கீதம் வேறொன்று மில்லையென்றும் கண்டுபிடித்திருக்கிறார்.