சாரங்கர் எழுதிய நூலிலும் அவருக்கு அதாரமாயுள்ள பரத நாட்டிய சாஸ்திரத்திலும் துவாவிம்சதி சுருதிகள் என்று சொல்லியிருப்பது ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் இருக்கவேண்டுமென்ற அபிப்பிரயாத்தை யுடையதாயிருக்கிறது. சட்சம பஞ்சமம் 13 சுருதிகளையும் சட்சம மத்திமம் 9 சுருதிகளையுமுடையதாயிருக்கிறது. இதையே ஆரம்ப சுரத்தையும் முடிந்த சுரத்யைும் நீக்கி நடுவில் 12, 8 சுருதிகளை ச-ப, ச-ம உடையதாயிருக்க வேண்டுமென்று சாரங்கள் சொல்லுகிறார். இவ்விதிப்படி சட்சமமும் பஞ்சமமும் ஒன்று சேர்ந்து தொனிக்காது. ஒன்று சேர்ந்து தொனிக்கும் சுரங்களே காதிற்கு இனிமையாயிருக்கும். அப்படியில்லாமல் குறைவது ஒழுங்கற்ற ஓசைகள் உண்டாவதற்கு ஏதுவாகும். அணுப்பிரமாணமும் கூடாமலும் குறையாமலும் சட்சம பஞ்சமம் சேர்ந்து தொனிக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் இனிய ஓசைகள் பிறக்கமாட்டாதென்றும் சட்சம பஞ்சம முறையாய் வெகு நுட்பமான சுரஞானத்தைக்கொண்டு ஒருஸ்தாயியில் பன்னிரு சுரங்களையும் 24 சுருதிகளையும் நிர்ணயித்து அம்முறைப்படியே தென்னிந்தியாவிலுள்ளோர் கானம் செய்திருக்கிறார்களென்று இதன் முன் மூன்றாவது பாகத்திற் சொல்லியிருக்கிறோம். அதில் இன்னின்ன சுரங்கள் ஒவ்வொரு சுருதி குறைந்து மொத்தத்தில் 22 சுருதிகளாக வருகிறதென்பதைப்பற்றியும் அதன்படி தற்காலத்தில் நாம் பாடும் இராகங்களில் சில இன்னின்ன சுருதிகளில் வருகிறதென்றும் இதன்முன் அட்டவணையாகக் கொடுத்திருக்கிறோம். தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று அறிய விரும்பும் விவேகிகளுக்கு அது போதுமானதா யிருக்குமென்று நம்புகிறோம். சுரஞானத்தைக்கொண்டு அறியவேண்டிய சுருதி நிச்சயத்தைப் பின்னக் கணக்குகளைக்கொண்டு பெருக்கிக்காட்டும் சில பேதங்கள் நீக்கி ஒன்றுமைப்பட்ட அபிப்பிராயம் உண்டாக்கும்படி நானும் கணக்கினால் காட்டத்துணிந்தேன். மேலும் தென்னிந்திய சங்கீதத்தில் பாடப்பட்டுவரும் இராகங்களில் எந்தெந்த சுரங்கள் வருகிறதென்று நான் ஆராய்ச்சி செய்த காலத்தில் 24 சுருதிகள் வரக்கூடியதாய் எனக்குத் தோன்றிற்று. அவைகளை இன்னும் நுட்பமாய் ஆராய்ச்சி. செய்கையில் அதிலும் நுட்பமான ஓசைகள் வருவதாக நான் அறிந்தேன். அதி சூட்சமமான இச்சுருதிகள் வழங்கிவருவதைக் கணிதத்தின் மூலமாகக் காட்டுவதோடு இன்னின்ன இராகங்களில் அவை வழங்கிவருகின்றனவென்றுகாட்டவும் வேண்டியிருக்கிறது. பன்னிரண்டு சுரங்களையும் அவைகளின் சேர்க்கையால் உண்டாகும் 72 மேளக்கர்த்தாவையும் திட்டமாய் அறிந்துகொள்ள இயலாமல் ஆக்ஷேபனை சொல்லும் சிலவித்துவான்கள் இதையும் தெரிந்துகொள்ளாமல் கூச்சலிடுவார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனாலும் நுட்பமான அறிவுடையோர் கவனத்திற்கு வரவேண்டுமென்றே சூட்சமமான சுருதிகளின் கணக்கும் இங்கே சொல்லவேண்டியதாயிருக்கிறது. தேகத்தின் செயல்களாலன்றி மற்றப்படி எவ்விதத்திலும் அறிந்து கொள்ளக்கூடாத சீவனை பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்னும் தசவாயுகளாகப் பிரித்து அவைகள் சரீரத்தில் இன்னின்ன இடங்களில் நின்று இன்னின்ன தொழில்கள் செய்கின்றனவென்றும் அவைகளில் இன்னின்னது கூடுதல் குறைவதினால் தேகத்தில் இன்னின்ன நோய்கள் ஏற்படுமென்றும், பிராண வாயுவை ஐந்து பூதங்களாகப் பிரிந்து அவைகள் இவ்வளவு காலம் இன்ன நாசியில் ஓடுகின்றனவென்றும் அவைகள் ஓடுவதைக்கொண்டு நடக்கும் பலன்கள் யாவையும் அறிந்துகொள்ளும் சர சாஸ்திரத்தையும் இன்னின்ன காலங்களில் இந்தச் சுவாச ஓட்டம் மாறுவதைக்கொண்டு ஆயுள் நிர்ணயம் செய்யும் கணிதத்தையும் சுவாசமானது ஓடும் பலத்தைக்கொண்டும் கர்ப்ப உற்பத்தி
|